• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியால் அச்சம் வேண்டாம்

Google Oneindia Tamil News

மதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்கு 4ஆம் இடத்தில் மகரம் ராசியில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிப்பதால் அதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். துலாம் ராசிக்கு வேலை, கல்வி, திருமணம், வருமானம் ஆகியவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். உழைப்புக்கு அஞ்சாமல் கிடைத்த வேலையை சளைப்பில்லாமல் விரும்பி செய்ய வேண்டும். உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும்.

பதவி உயர்வு

பதவி உயர்வு

சனிபகவான் பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டின் மீது விழுவதால் வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும்.

கடன்கள் அதிகரிக்கும்

கடன்கள் அதிகரிக்கும்

ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வீடு வண்டி வாகனம்

வீடு வண்டி வாகனம்

நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

பெண்களுக்கு மதிப்பு

பெண்களுக்கு மதிப்பு

கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.

சனிபகவான் பார்வை

சனிபகவான் பார்வை

அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.

உழைத்தால் வெற்றி

உழைத்தால் வெற்றி

மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சோதனையான காலகட்டமாகும். உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தேவையற்ற நண்பர்களை வெட்டி விடுங்கள்.

காலபைரவர் தரிசனம்

காலபைரவர் தரிசனம்

அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். பாதிப்புகள் குறையும்.

English summary
Sani peyarchi palan tamil 2020 - 2023 Thulam Rasi Arthastama sani Peridiction Sani transit in your 4th house briging in a lots of ups and down. This is called the name of Arthastama Sani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X