For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி பெயர்ச்சி 2020: மாணவர்களே சனி பகவானை கூல் பண்ண இந்த பரிகாரம் பண்ணுங்க

படிப்பில் திடீரென குழந்தைகள் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: சனிபகவான் மந்தமான கிரகம். எனவே சனிபகவானின் பார்வை, சஞ்சாரத்தைப் பொருத்து படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியாகவும், கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும், துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் இருக்கிறார் சனிபகவான். சனிபகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்கார மாணவர்கள் என்ன பரிகாரம் பண்ணலாம் என்று பார்க்கலாம்.

    படிப்பில் திடீரென குழந்தைகள் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

    பொதுத்தேர்வுக்கு சில மாதங்களே உள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் எந்த ராசி மாணவர்கள் எந்த திசையில் அமர்ந்து படிக்கலாம், என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஹயக்ரீவரையும், ஆஞ்சநேயரையும், முழுமுதற்கடவுள் விநாயகரையும் மாணவர்கள் வணங்கினால் அதிகம் மதிப்பெண் பெறலாம். இது பொதுவான பலன்தான். ஜாதக கட்டத்தில் 2வது இடம், 4வது இடம் 9வது இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்களைப் பொறுத்து உங்களுக்கு உயர்கல்வி யோகம் கூடி வரும்.

    மேஷம்

    மேஷம்

    மேஷம் ராசிக்கார மாணவர்களே... செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட நீங்கள் எப்பவுமே படிப்பில் கெட்டிதான். உங்க ராசிக்கு 10வது இடத்தில் சனி அமர்ந்துள்ளார். மேஷ ராசிக்கார மாணவர்களுக்கு குருவின் சஞ்சாரம் உயர்கல்வி யோகத்தை தருகிறது. குரு பாக்ய ஸ்தானமான 9வது வீட்டில் அமர்ந்துள்ளார். சனிப்பெயர்ச்சியும் படிப்பில் உற்சாகத்தை தருகிறது. சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை வெட்டி விடுங்க. மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல விலக காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். ஆஞ்சநேயரின் அம்சமாக உள்ள ராகவேந்திரர் ஸ்வாமிகளை வியாழக்கிழமைகளில் வணங்கி வர நன்மையே நடக்கும். உங்கள் சாப்பாட்டில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். பேரிச்சம் பழம், தேன், எள் மிட்டாய் போன்றவைகளை சாப்பிடலாம்.

    ரிஷபம்

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கார மாணவர்களே... சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட நீங்கள் எப்பவுமே படிப்பில் சுட்டிதான். இப்போது உங்கள் ராசிக்கு 9வது இடத்தில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் ராசிக்கு 8வது இடத்தில் அமர்ந்துள்ளார். குருவின் பார்வை நான்காம் வீட்டின் மீது விழுகிறது. உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. தேர்வு நேரமான மார்ச் மாதத்தில் சூரியன் 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் உச்சமடைகிறார், புதன் நீசமடைகிறார். எனினும் நன்றாக கவனத்துடன் படித்தால் நல்ல மதிப்பெண் பெற்று மேற்படிப்புக்கு செல்லலாம். கல்வி கடன் எளிதில் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பு அமையும். அவ்வப்போது நிலக்கடலை சாப்பிடவும். லட்சுமி ஹயக்ரீவரை மனதார வழிபடலாம்.

    மிதுனம்

    மிதுனம்

    மிதுன ராசிக்காரர்களே... புத்தி நாதன் புதன் உங்கள் ராசிக்காரர்தான். இப்போது சனிபகவான் அஷ்டமத்து சனியாக அமர்ந்துள்ளார். சனிபகவான் உங்களுக்கு சோதனை தருவார் ஆனால் வேதனை தரமாட்டார். விபரீத ராஜயோக காலம் என்றாலும் படிப்பில் கவனமாக படிக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை புரிந்து படிக்க வேண்டும். குரு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். கவனமாக படித்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம். நெல்லிக்காயை சாப்பிடவும். மாதுளை ஜூஸ் அருந்தவும். கல்விக் கடன் கிடைப்பதில் பெரிய போராட்டமே நடைபெறும். போட்டி தேர்வில் அதிக கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் மட்டுமல்லாது தினசரியும் தட்சிணாமூர்த்தியை மனதில் நினைத்துக்கொண்டு படிக்கவும். தசாபுத்திக்கு ஏற்ப நன்மைகள் அதிகம் நடக்கும்.

    கடகம்

    கடகம்

    மனோ காரகன் சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி மாணவர்களே. சனி பகவான் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துள்ளார். விளையாட்டு தனத்தை விட்டு விட்டு தேர்வில் அக்கறை காட்டவும். குரு பகவான் ராசிக்கு ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் உயர்கல்வி பயில வாய்ப்புகள் அமைந்தாலும் நிறைய தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். படிப்பில் அதிகக் கவனமும் அக்கறையும் தேவை. கல்விக் கடன்கள் எளிதில் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் அமைய போராட வேண்டி வரும். நல்ல மதிப்பெண் பெற விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடலாம். அவ்வப்போது சத்தான காய்கறிகள்,பழங்களை சாலட்களாக சாப்பிடலாம். இது பொது பலன்தான். தசாபுத்தி சரியாக இருந்தால் நன்மையே நடக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி மாணவர்களே. சனிபகவான் உங்க ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து உங்க ராசிக்கு 12, 3ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குருபகவான் ராசிக்கு 5 வது வீட்டில் அமர்ந்திருக்கிறார். படிப்பில் சந்தேகம், சஞ்சலம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லுரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளுங்கள். கல்வி கடன்கள் எளிதாகக் கிடைக்கும். கல்வியின் உயர்கல்வியின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கலாம். அதிக மதிப்பெண் பெற தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். சாப்பாட்டில் நெய் சேர்த்துக்கொள்ளவும். சோர்வை தவிர்க்கலாம்.

    கன்னி

    கன்னி

    புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி மாணவர்களே சனிபகவான் உங்க ராசிக்கு ஐந்தாவது வீட்டில் அமர்ந்துள்ளார். குரு பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இருந்த தலைவலி பிரச்சினைகள் தீரும். நோய்கள் குணமாகும். மாணவர்கள் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டு தேர்வு நேரத்தில் சளி தொந்தரவுகளை இழுத்து வைத்துக்கொள்ள வேண்டாம். எதிர்மறை எண்ணங்களையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டு விட்டு படிப்பில் சுறுசுறுப்பாக கவனம் செலுத்துங்கள். கிழக்கு திசை நோக்கி அமர்ந்து படியுங்கள். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடினாலும் வெற்றி உங்களுக்குத்தான். பாசிப்பயறு வேக வைத்து சாப்பிடலாம். தடைகளை தகர்க்க அருகில் உள்ள பூவராக சாமியை வணங்குங்கள். புதன் பகவானை பாசிப்பயறு வைத்து வழிபட நினைவாற்றல் அதிகரிக்கும்.

    துலாம்

    துலாம்

    சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. சனிபகவான் அர்த்தாஸ்டம சனியாக அமர்ந்துள்ளார். துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர். சுக்கிரனும் சனியும் நண்பர்கள் என்றாலும் தேர்வு நேரத்தில் நன்றாக படிக்கவும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த கூடாது. தேவையற்ற நட்பு வட்டாரத்தை தவிர்க்கவும். குரூப் ஸ்டடி என்று நேரத்தை செலவிட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை புரிந்து படித்தால் படிப்பது மனதில் பதியும். நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியது வரும். கல்விக் கடன் கிடைப்பதில் இழுபறியாக இருந்து வரும். திங்கட்கிழமைகளில் சரஸ்வதி தேவியை வழிபடலாம். கொண்டைக்கடலை சுண்டல் செய்து சாப்பிடலாம்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி மாணவர்களே நீங்கள் படிப்பில் கெட்டிக்காரர்கள். ஏழரை சனி காலம் முடிந்து விட்டது 3ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். தொடர்ச்சியாக விடாமல் படிக்கவும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர்வதில் தடைகள் ஏற்பட்விலகும். ஆஞ்சநேயரை வழிபடலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். சாப்பிடும் உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். உடல் சூடு தணிய சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

    தனுசு

    தனுசு

    குரு பகவானை ராசி நாதனாக கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள். படிப்பில் நீங்க கெட்டிக்காரர்கள். . ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் உங்களுக்கு இனி பாத சனியாக இரண்டரை ஆண்டுகள் பயணிக்கப் போகிறார் சனிபகவான். மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 4வது ஸ்தானத்தை பார்ப்பதால் படிப்பில் கவனம் தேவை. சனிபகவான் உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படிங்க. குரு பகவான் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். மாணவர்கள் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை வணங்க தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம். படிக்கும் முன்பாக நிலக்கடலை உருண்டை சாப்பிடலாம். கடலை மிட்டாய் சாப்பிடுங்க நினைவாற்றல் அதிகரிக்கும்.

    மகரம்

    மகரம்

    மகர ராசி மாணவர்களே... உங்கள் ராசி நாதன் சனிபகவான் ஜென்ம ராசியில் அமர்கிறார். 12 வது இடத்தில் இருக்கும் குரு பகவானால் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டாலும் உங்க ராசி அதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாக இருப்பதால் முதல் சுற்றில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலையே ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும். ஞாபகசக்தியை அதிகரிக்க உணவில் வல்லாரைக் கீரை சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்கள். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். விநாயகப் பெருமானை வழிபடுங்கள், வினைகள் தீரும். மகரம் எதையும் எளிதில் சமாளிக்கும்

    கும்பம்

    கும்பம்

    கும்பம் ராசி மாணவர்களே நீங்க ரொம்ப புத்திசாலிகள். உங்க ராசி நாதன் சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமர்ந்துள்ளார். ஏழரை சனி காலம் தொடங்குவதால் பயம் வேண்டாம். நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. மாணவர்கள் வெளியில் விற்கும் உணவுகள் கண்டதையும் வாங்கி சாப்பிட வேண்டாம். வயிறு கோளாறுகள் வந்து விடும். படிப்பில் அதிகக் கவனம் செலுத்தினால் மட்டுமே மதிப்பெண்கள் பெற முடியும். வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் கவனமாக இருக்கவும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம். கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். தினசரி இருவேளை பாதாம் பால் சாப்பிடவும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடவும்.

    மீனம்

    மீனம்

    குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசி மாணவர்களே... நீங்கள் படிப்பில் படு சுறுசுறுப்பானவர்கள். உங்கள் ராசி நாதன் சனிபகவான் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இது நன்மை தரும் அமைப்புதான். எனினும் கவனமாக படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். உங்க ராசிநாதன் குரு பகவான் பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தவும். உணவில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

    English summary
    Check out and read 2020 - 2023 Saturn Transit Horoscope Sani Peyarchi for 12 zodiac signs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X