For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : அசுவினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்

ஜனவரி 24, 2020 திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்

Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.
சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்று அசுவினி, பரணி, கிருத்திகை நட்சத்திரகாரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்களையும் பரிகார தலங்களையும் பார்க்கலாம்.

சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனிபகவான் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் ஜனவரி 24, 2020ஆம் தேதியன்று அமாவாசை திதியில், சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியல் 12 ராசிகளில் உள்ள 27 நட்சத்திரகாரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சந்தோஷம் அதிகம் தரும் சனி

சந்தோஷம் அதிகம் தரும் சனி

நாம் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே நாம் பிறந்த நட்சத்திரம், ராசி. நட்சத்திரங்கள் நம்மை ஆட்சி செய்கின்றன. அசுவினி கேது ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம். சனிபகவான் மகரத்தில் ஆட்சி பெற்று அமரும் காலத்தில் அசுவினி நட்சத்திரகாரர்களுக்கு செய்யும் தொழிலில் உற்சாகம் அதிகமாகும். காரணம் தொழில் ஸ்தானம் பத்தாம் இடம். சுய தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் வரும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சனியின் பார்வையால் உடல் பலம் மன பலம் அதிகமாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்களின் திறமை பளிச்சிடும். அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு அபாரமாக இருக்கும்.

நோய்கள் நீங்கும்

நோய்கள் நீங்கும்

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஔஷதீஸ்வரர் ஆலயம் அஸ்வினி நட்சத்திரம் வழிபட்ட ஆலயம். இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து ஆண்டுக்கு மூன்று முறை அஸ்வினி நட்சத்திர நாளில் இந்த ஆலயம் சென்று வழிபட்டு வரலாம். மருத்துவ குணங்கள் கொண்டஆலயம், தன்னை தரிசனம் செய்பவர்களின் பிணிகளையும், துன்பத்தையும் போக்குகிறது. பிரம்மதேவர் இந்த ஸ்தலப் பகுதிக்கு வந்து பிரம்மதீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, பூஜை செய்த போது வில்வ மரத்தடியில் சிவபெருமான் ஜோதிலிங்கமாக காட்சி அளித்தார். அன்றைய தினம் அஸ்வினி நடச்சத்திரம் ஆனதால் அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

சனியால் சந்தோஷம்

சனியால் சந்தோஷம்

பரணி சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களின் வெற்றியும் திறமையும் அதிகமாகும். அதிக நன்மைகளை தரக்கூடியது. சனியும் சுக்கிரனும் நட்பு கொண்டவர்கள். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபமும் வருமானமும் கூடும். அரசு வேலைகள் கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகமாகும்.
மயிலாடுதுறை அருகில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் ஆலயம். பரணி நட்சத்திரம் பூலோகம் வந்து கங்கை நீரால் அபிஷேகம் செய்து யாகம் செய்த தலம். பரணி நட்சத்திர நாளில் அக்னீஸ்வரர் ஆலயம் சென்று யாகம் சென்று வழிபட நன்மைகள் கிடைக்கும்.

வழிபடவேண்டிய தலம்

வழிபடவேண்டிய தலம்

இந்த தலத்தில் இறைவன் அக்னி சொரூபமாக இருப்பதால், அவருடைய வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த இறைவன் பரணி நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பலதரப்பட்ட தோஷங்களிலிருந்து விடுபட வணங்கவேண்டிய பரிகாரக் கோயில் இது. அக்னீஸ்வரரை வழிபட்டால் பகைவர் தொல்லை, மரணபயம், நோய்கள் ஆகியவை நீங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதிகம். குறிப்பாக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது, அளவற்ற நலன்களைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

ரிஷபம் கிருத்திகை

ரிஷபம் கிருத்திகை

சூரியனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம் கிருத்திகை. மேஷம் ராசியில் கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். சக்தி வாய்ந்த சனிப்பெயர்ச்சியாக உள்ளது. ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை 2,3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. மகத்தான நன்மை நடைபெறும். இழந்த சொத்துக்களை மீட்பீர்கள். பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். பதவிகள் தேடி வரும். சூரிய பகவானை வழிபடுவது நல்லது. எல்லாம் வல்ல முருகப்பெருமானை வழிபடுவதால் நன்மைகள் நடைபெறும். மகத்தான சனிப்பெயர்ச்சியாக உள்ளது. ஜென்ம நட்சத்திர நாளில் ஆண்டுக்கு மூன்று முறையாவது முருகன் கோவிலுக்கு சென்று யாகம் செய்வது நல்லது. நன்மைகள் நடைபெறும்.

English summary
Sani peyarchi palangal 2020 to 2023 Effects and Parikarangal for Aswini, barani and Karthigai stars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X