• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி பெயர்ச்சி பலன்கள்: 2020ல் சனி பார்வை படப்போகும் அந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் தெரியுமா

|

சென்னை: நவகிரங்கள் ஒரு இடத்தில் இருந்து சரியாக ஏழாம் பார்வையாக தனக்கு எதிராக இருக்கும் ராசிகளை பார்வையிடும். குரு, சனி, செவ்வாய் ஆகிய ராசிகளுக்கு ஏழாம் பார்வை தவிர சில பார்வைகளும் உண்டு. சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி. குரு பார்த்த இடம் விருத்தி சுபம். சனி பார்த்த இடம் பாழ் தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனிபகவான் பார்க்கும் இடங்கள் பாழாகும் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. சனி பகவான் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். 2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகரம் ராசியில் உள்ள சனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும் , தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

சனி பெயர்ச்சியின் போது ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார். ஒருவரது ஜென்மராசிக்கு 12, 1, 2, ஆகிய ராசி வீடுகளில் தலா இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கும் காலம் ஏழாரை சனி காலமாகும். 2020 சனி பெயர்ச்சியில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி காலமாகும். ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 7ஆம் இடத்தில் கண்டக சனி, 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

மேஷம்

மேஷம்

சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். பத்தாம் வீட்டில் இருந்து சனியின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் இடம், ஏழாம் இடம், 12ஆம் இடங்களின் மீது விழுகிறது. அப்போ இந்த பார்வையால் என்ன பலன் என்று பார்க்கறீங்களா? சனி பகவான் சுகஸ்தானம், மோட்ச ஸ்தானம், களத்திர ஸ்தானங்களை பார்க்கிறார். நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. தடைகள் நீங்கும், புது வீட்டிற்கு குடி போகலாம், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. சுகமான தூக்கம் வரும். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ரிஷபம்

ரிஷபம்

சனி பகவான் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனியின் பார்வை உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, ஆறாம் வீடு, லாப ஸ்தானமான 11வது வீடுகளின் மீது விழுகிறது. இந்த பார்வையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடன்கள் அடைபடும், எதிரிகள் தொல்லைகள் தீரும், நோய் தொந்தரவுகள் கட்டுப்படும். உங்க முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். இளைய சகோதரர்கள், மூத்த சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும்.

செய்யும் காரியங்களில் ஆரம்பத்தில் முயற்சியில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளால் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்கள் கைகூடும் புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும் அவர்களால் நன்மை உண்டாகும். உங்களை காட்டிலும் இளையவர்களால் நன்மை ஏற்படும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் உயர்ந்த் காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, வண்டி, வாகனங்கள், மனை வாங்க வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குழந்தைகளால் எதிர்பாராத தன வரவு அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

மிதுனம்

மிதுனம்

சனிபகவான் உங்க ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசிக்கு இரண்டாம் வீடு ஐந்தாம் வீடு மற்றும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். இதுவரை நிலுவையில் இருந்து வந்த வராத பணம், நகை, பொருட்கள் எல்லாம் தவணை முறையில் வந்து சேரும். பேச்சில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்தல் வேண்டும். பணம், பொருள் சாதகமாக இருந்து வரும். கூட்டு குடும்பத்தில் சிற்சில சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவால் சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும். ஐந்தாம் வீட்டினை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள். பத்தாம் இடம் என்பது உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், கீர்த்தி அதிகரிக்கும் இடமாகும். தொழிலில் முதலீடு செய்யவும் உங்களை தொழில் முனைவோர் ஆக்கவும் செய்வார் வழி வகுக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக பரிசும் பதவியும் கிட்டும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும். விருப்பங்கள் தடை ஏற்பட்டு பூர்த்தியாகும். அரசாங்க வேலையில் ஒரு சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

கடகம்

சனிபகவான் ராசிக்கு ஏழாவது வீடான மகரத்தில் அமர்ந்து ஏழுக்குடையவன் ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமண தடைகள் ஏற்பட்டு திருமணம் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.சனி பார்வை நேராக ராசியின் மீது விழுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். பயணங்களில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

சிம்மம்

சிம்மம்

சனிபகவான் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். சனிபகவானின் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரும். முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழும் நிலை ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற வைத்திய செலவுகள் ஏற்படும். 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படும். கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற விரயம், அலைச்சல்கள், அவமானங்களும் ஏற்படும். அதே சமயம் கணவன் அல்லது மனைவியின் பண வரவும், பொருள் வரவும் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய குச்சனூர் சென்று சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

சனிபகவான் 3வது பார்வையாக உங்க ராசிக்கு ஏழாம் வீட்டை பார்க்கிறார். திருமணம் நடைபெறாமல் தள்ளி போன சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்தேற வாய்ப்புகள் அமையும். புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். குடியிருக்கும் வீடு, அலுவலகம் பணிபுரியும் இடம், தொழில், ஸ்தாபனம் இவற்றில் மாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். சனிபகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை கைக்கு வராத பணம், நகை, பொருட்கள் எல்லாம் தவணை முறையில் வந்து சேரும். பேச்சில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்தல் வேண்டும். பணம், பொருள் சாதகமாக இருந்து வரும். கூட்டு குடும்பத்தில் சிற்சில சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவால் சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும். சனியின் ஏழாவது பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும்.

துலாம்

துலாம்

நான்கு ஐந்தாம் அதிபதி சனி தனது பத்தாம் பார்வையால் துலாம் ராசியை பார்க்கிறார். நீதி, நேர்மை, நாணயமாக இருப்பீர்கள். நினைத்தது நடக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடியும். ஆட்சிப்பெற்ற சனியின் பார்வையால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றமான மாற்றம், வெளிநாடு பயணம் ஏற்படும். நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு யோகமும் முன்னேற்றமும் அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து சென்று தொழில் செய்வீர்கள். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும். தொழிலில் முதலீடு செய்யவும் புதிய தொழில் தொடங்கவும் வழி வகுக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக பரிசும் பதவியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும். உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

சனிபகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் தைரிய சனியாக அமர்ந்து உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு, மற்றும் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். காதல் பறவையாக மாறுவீர்கள், சிலருக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. கடன் வாங்கவும் வேண்டாம்.

தனுசு

தனுசு

சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்க ராசிக்கு நான்காம் வீட்டை பார்க்கிறார் அம்மாவிற்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். அம்மாவின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும். நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

மகரம்

மகரம்

சனிபகவான் ஜென்ம சனியாக அமர்ந்து உங்க ராசிக்கு மூன்றாவது இடம் ஏழாவது இடம், பத்தாவது இடங்களை பார்வையிடுகிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் லாபம் அதிகரிக்கும். தனது ஏழாவது பார்வையால் ஏழாவது வீட்டினை பார்க்கிறார். திருமண முயற்சிகள் கைகூடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்ப்பதால் சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும். விருப்பங்கள் தடை ஏற்பட்டு பூர்த்தியாகும். அரசாங்க வேலையில் ஒரு சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் பிரிந்து செல்வர். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் வந்து சேரும். தொழில் நல்ல லாபம் கிட்டும். தந்தையாரால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். பெரிய மனிதர்கள் நட்பு கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவான் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்.

மீனம்

மீனம்

சனிபகவான் மூன்றாவது பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் சோம்பலை தள்ளி சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எந்த செயலையும் தள்ளிப் போடாமல் அன்றே முடிக்க வேண்டும். எதிலும் அவசரமில்லாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். சோம்பலை விட்டுத்தள்ளுங்கள். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். சனியின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. சனியின் பார்வையால் பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sani will be transiting in Dhanusu (Sagittarius Sign) in the beginning of the year 2020. On 24th January 2020, Saturn will move to Makaram (Capricorn sign)Check out these 3 rasigal Sani parvai palangal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more