For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020: சனி சாந்தி யாகம்... பரிகாரம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் யார்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி மஹா யாகம்.வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்ட

Google Oneindia Tamil News

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mithunam | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுன ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: ஜென்ம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை சனி புத்தி நடப்பவர்கள் வரும் வெள்ளிக்கிழமை நிகழும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் யாகத்தில் பங்கேற்கலாம். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் இந்த யாகத்தில் பங்கேற்கலாம். ஏழரை சனி நடைபெறும் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களும் அர்தாஷ்டம சனி நடைபெறும் துலாம், அஷ்டம சனி நடைபெறும் மிதுனம், கண்டச்சனி நடைபெறும் கடகம் ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

    மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் ஜனவரி 24ஆம் தேதியன்று தை அமாவாசை திதியில், பிரகாச மூர்த்தியான சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நக்ஷத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    Sani peyarchi Yagam Parikaram at sornasaneeswarar in Walajapet

    தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : 40 அடி உயர பர்மா தேக்கில் புதிய கொடி மரம்தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : 40 அடி உயர பர்மா தேக்கில் புதிய கொடி மரம்

    ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.

    சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

    சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

    சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் ஏற்படும் தோஷங்கள் குறைய சனிப்பெயர்ச்சி யாகத்தில் தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    Sani peyarchi Yagam Parikaram at sornasaneeswarar in Walajapet

    சனியின் சஞ்சாரம் பார்வை :

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். அதே நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது.

    வாலாஜாபேட்டை ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் ஆலய மகிமை :

    ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும்.

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனி ஆலயம் அமைத்து கொண்டு சனிபகவான் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். கடந்த 14.06.2019 அன்று சொர்ண சனி பகவான் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பல்வேறு தரப்பு மக்கள் சனி பகவானை மிகவும் ஆர்வத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் ஆயுள் கண்ட பிரச்னைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சனி பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு நர்பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    Sani peyarchi Yagam Parikaram at sornasaneeswarar in Walajapet

    இச்சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகமும், பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

    அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் : தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

    English summary
    With the blessings of our beloved Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, we are conducting Sani Peyarchi maha yagam on 24.01.2020 at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Ranipettai District, Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X