
சனி வக்ர பெயர்ச்சி.. மகரத்திற்கு திரும்பும் சனியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தெரியுமா?
சென்னை:சனிபகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார் என்றாலும் இப்போது வக்ரநிலையில் சஞ்சரிக்கிறார். சனி வக்கிரமடைந்து மகர ராசிக்கு பின்னோக்கி செல்கிறார். சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!
சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு வக்ர காலத்தில் தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும். ஜூலை முதல் அக்டோபர் சனி பகவான் வக்ர கதியில் செல்வதால் என்னமாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சனியின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் நன்மையைத் தரும். பொருளாதார வசதி அதிகரிக்கும். வேலைக்காக நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும் அதிக லாபம் கிடைக்கும். உழைப்பு வீண் போகாது காரிய வெற்றி உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும்.

கடகம்
நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள். சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்
மகர ராசிக்கு வரும் சனியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் உண்டாகும். வேலையில் பதவியில் உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கும். தொழில் தொடங்கலாம். நல்ல லாபமும் வருமானமும் அதிகரிக்கும். சனி வக்ர பெயர்ச்சியால் அனைத்து வகையிலும் பலன் கிடைக்கும்.

கன்னி
சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். பதவியில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சங்கடங்கள் உயர்ந்து சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

துலாம்
உங்களின் கௌரவ நிலை உயரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

தனுசு
சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். காரியத்தடைகள் நீங்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மீனம்
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.