For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கையில்... 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த... பெரிச்சிகோவில் சிவாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் கிராமத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த சுகந்தவனேஸ்வரர் சிவாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 12 ராசிக்காரர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று சனிபகவானின் நற்பலன்களை பெற்றனர்.

Sanipeyarchi ceremony at the 1400 year old Shiva temple in Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் அருகே பெரிச்சிக்கோவில் கிரமத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகந்தவனேசுவரர் சிவாலயம் உள்ளது. இங்கு போகர் சித்தரால் நவபாஷாணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இருமுக காசிவயிரவர் சன்னதிக்குப் பின்னால் தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக வன்னிமரத்தடியில் மேற்கு நோக்கிய நிலையில் தனிச்சன்னதியில் இருக்கும் ஒற்றைச் சனீசுவரர் ஆலயம் உள்ளது.

 சனிப்பெயர்ச்சி 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள் சனிப்பெயர்ச்சி 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்

திருநள்ளாறு, குச்சானூருக்கு அடுத்தபடியாக இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இன்று சனிப்பெயர்ச்சியன்று கோவிலில் சனீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் அதிகாலை 3 மணியவில் கோவிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 12 ராசிக்காரர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று மேலும் நற்பலன்களை பெற்றனர். சனீசுவரர் அருளாசியை பெற்றனர்.

Sanipeyarchi ceremony at the 1400 year old Shiva temple in Sivagangai

இந்த ஹோமத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் முன்னரே தங்களது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை கோவிலுக்கு வந்து முன்னரே முன்பதிவு செய்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியையும் பின்பற்றினார்கள். மேலும் இன்று கோவிலில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பெரிச்சிகோவில் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

English summary
The Sanipeyarchi celebrations will be held on the 27th at the 1400 year old Sukandavaneswarar Shiva Temple in the village of Perichikovil in Sivagangai District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X