• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆடி செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி விரதம் - எதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர்

Google Oneindia Tamil News

மதுரை: செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான நாளைய தினம் அங்காரக சதுர்த்தி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். கடன் பிரச்சினை நீங்கும், நோய் பாதிப்புகள் நீங்கும், எதிரிகள் தொல்லை விலகும் என்பது நம்பிக்கை.

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளாகி வருபவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்தால், சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

திண்டுக்கல்லில் குடும்ப தகராறு.. கதவை தட்டியும் திறக்காத மனைவி.. இறந்ததாக கருதி கணவர் தற்கொலை திண்டுக்கல்லில் குடும்ப தகராறு.. கதவை தட்டியும் திறக்காத மனைவி.. இறந்ததாக கருதி கணவர் தற்கொலை

ஆடி மாதம் செவ்வாய்கிழமை தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும் திருமண தடைகள் அகலும். குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

விநாயகர் மகிழ்ச்சி

விநாயகர் மகிழ்ச்சி

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அங்காரக சதுர்த்தி என்று அழைக்கின்றனர். பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவர் செவ்வாய் கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்கி விநாயகரை வழிபட்டு வந்தால் பெரும் பணக்காரர் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை சதுர்த்தி

செவ்வாய்க்கிழமை சதுர்த்தி

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவிக்க கடன் பிரச்சினை தீரும்.

பொருளாதாரம் உயரும்

பொருளாதாரம் உயரும்

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம். தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

விநாயகரின் அருள் கிட்டும்

விநாயகரின் அருள் கிட்டும்

புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குடும்பத்தில் உள்ள வறுமையை அகற்ற வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளாகி வருபவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

English summary
Sanakshti Chaturthi falls on a Tuesday, it is regarded as Angaraka sankatahara chaturthi. Angaraka sankatahara chaturthi in 2021 is falling on July 27th 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X