For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்வில் வெற்றி பெற மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயர சரஸ்வதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்வு நேரம் நெருங்கி விட்டது. படித்தது நினைவில் இருக்க வேண்டுமே என்ற பயம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. படிப்போடு பகவானையும் சரணடைகின்றனர் மாணவர்கள். கல்வியில் சிறந்து விளங்க வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

03.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நன்மை தரும் நான்கு ஹோமங்கள் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் உயர அதி முக்கியத்துவம் பெறுகிறது. ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன. மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.

எத்தனை செல்வம் இருந்தாலும், வசதி இருந்தாலும், அவற்றை ஒருவர் அனுபவிப்பதற்கு தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதன்படி நாம் நம் உடலை நோய் நொடிகளில் இருந்து காக்க வேண்டும். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் ஆதி மருத்துவரான ஸ்ரீதன்வந்திரியை ஆராதித்து ஆசிகளைப் பெறுவது அவசியம். ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அனந்தலை மதுராவில் தனி சந்நிதியோடு சக்தி வாய்ந்த பீடம் அமைந்து இன்றைய தினத்தில் 75 சந்நிதிகளும், 468 சித்தர் சந்நிதிகளும் கொண்டு பிரமாண்ட வாழ்வியல் மையமாக மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு வருகிறது.

மூலிகை ஹோமங்கள்

மூலிகை ஹோமங்கள்

கோடி ஜப தன்வந்திரி ஹோமம், கோடி ஜப குபேர யாகம், கோடி ஜப காலபைரவர் யாகம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 1,32,000 மோதக ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம், 10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு விசேஷ ஹோமம், தாமரை பூக்களால் லக்ஷ ஜப ஹோமம், 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம் மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய் ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம், 10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு ஹயக்ரீவர் ஹோமம் போன்ற பல்வேறு யாகங்கள் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இயற்கை அறிவியல்படி பூமியில் விளையக் கூடிய ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதன்படி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு இந்த பீடத்தில் நடக்கின்ற ஒவ்வொரு ஹோமமுமே விசேஷமானது.

தேர்வு பயம் போகும்

தேர்வு பயம் போகும்

வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் செலுத்தவும், விளயாட்டில் ஏற்படும் ஆர்வம் தேர்வு முடியும் வரை தள்ளி வைக்கவும், நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.

தேர்வில் வெற்றி தரும் ஹோமம்

தேர்வில் வெற்றி தரும் ஹோமம்

மாணவ மாணவிகளின் நினைவாற்றல் அதிகரிக்கவும், அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகவும், வெற்றிக்கான நம்பிக்கை மேம்படவும், இலக்குகளை அடைவதற்கான சக்தி கிடைக்கவும், உங்கள் கல்விப் பயணம் மேன்மை அடையவும், மாணவர்கள் சிறந்த முறையில் கவனத்துடன் கல்வி பயின்று, தேர்வுகளில் அதிக மதிபெண்கள் பெற்று வெற்றி பெறவும் பெருமையும், புகழும் சேரவும். திறமை மற்றும் நம்பிக்கையில் வளம் பெறவும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 24.02.2019 அன்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமம் நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு ஆரோக்கியம்

மாணவர்களுக்கு ஆரோக்கியம்

இந்த வரிசையில் வருகிற 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நன்மை தரும் நான்கு ஹோமங்கள் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் உயர அதி முக்கியத்துவம் பெறுகிறது. ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன.

வெற்றி தரும் ஹோமம்

வெற்றி தரும் ஹோமம்

மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது. கல்விதான் அனைத்துக்கும் பிரதானம். இன்றைக்குக் குடும்ப ஒற்றுமை, வேலையின்மை, தாம்பத்தியத்தில் பிரிவு, குழந்தைப் பேறின்மை, தேவையில்லாத வழக்குகள், விவகாரங்கள் போன்றவற்றுக்குப் போதிய கல்வியறிவு இல்லாததுதான் காரணம். மனிதனைப் பக்குவப்படுத்துவது கல்வி. அது இல்லை என்றால், அனைத்திலும் தோல்விதான் கிடைக்கும். எனவே, இந்த உலகில் உள்ள அனைவரும் போதிய கல்வியறிவு பெற வேண்டும், கல்வித் திறன் மேம்பட வேண்டும், பெற்ற கல்வியால் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஹோமங்கள் நடைபெற உள்ளன.

பிரம்மாண்ட ஹோமம்

பிரம்மாண்ட ஹோமம்

இன்றைய மாணவர்கள் துர் சகவாசத்தாலும், போதிய வழிகாட்டுதல் இல்லாததாலும், தவறான பாதையின் பக்கம் திரும்புகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பள்ளிக்கூடங்களின் தரமும் உயர வேண்டும்... மாணவர்கள் - ஆசிரியர் ஒற்றுமை ஓங்க வேண்டும்... மாணவர்கள் பெற்றோர் இடையே இருக்கின்ற உறவு முறை ஓங்க வேண்டும் என்பதால் தேர்வுகள் துவங்க உள்ள இந்த நேரத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரும் முயற்சியில் இத்தகைய ஹோமம் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது.

''இதையே ஒரு அழைப்பிதழாகக் கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், சக ஊழியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த பிரமாண்டமான ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.

ஏலக்காய் ஹோமம்

ஏலக்காய் ஹோமம்

ஏலக்காய் தவிர ஹோமத்தில் தேன், நெய், தாமரை மற்றும் பல விதமான புஷ்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தங்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் கல்வியில் நன்றாக மேம்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதில் கலந்து கொள்ள பக்தர்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் கல்வித் தடையினால் ஏற்படக்கூடிய நோய்களும், தேவையற்ற பழக்கவழக்கத்தினால் ஏற்படும் நோய்களும், மன அழுத்தங்களால் ஏற்படும் நோய்களும் நீங்குவதற்காகவும் புத்தாண்டில் மக்கள் நோயின்றி ஆரோக்யமாக வாழ பத்து லட்சம் ஏலக்காயை கொண்டு தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.

சத்தான ஏலக்காய் மாலை

சத்தான ஏலக்காய் மாலை

தெய்வத் திருவுருவங்களுக்கு பூமாலை, சந்தன மாலை அணிவிப்பது போல் ஏலக்காய் மாலையும் விசேஷம். புரதச் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை ஏலக்காயில் அடங்கி உள்ளன. வாதம், பித்தம், கபம் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியான இந்த ஏலக்காயைக் கொண்டு நடத்தப்படும் யாகத்தில் அனைவரும் பங்கேற்கலாம். தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Dr. Sri Muralidhara Swamigal and in regard to the forthcoming examinations special arrangements have been made for Saraswathi, Vidya and Hayagrivar homam at Danvantri Peedam, Walajapet on February 24, and March 3rd, 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X