For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சார்வரி ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எப்போது தெரியுமா

Google Oneindia Tamil News

Recommended Video

    Sani Peyarchi 2020 | magaram | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- சிம்ம ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: நவகிரகங்களில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் கடந்த தை 10ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் வரும் மார்கழி மாதம் 14ஆம் நாள் டிசம்பர் 26ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியும், ராகு கேது பெயர்ச்சியும் சார்வரி தமிழ் புத்தாண்டில் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    நவ கிரங்களும் நகர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறது வான சாஸ்திரம். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும், முக்கூட்டு கிரகங்களான சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும், செவ்வாய் ஒன்றரை மாதத்திற்க்கு ஒருமுறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் ராகுவும் கேதுவும் ஒன்றை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயற்சியாகின்றனர்.

    ராகு கேது பெயர்ச்சி

    ராகு கேது பெயர்ச்சி

    நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆவணி மாதம் 16ம் நாள் 01.09.2020 செவ்வாய்கிழமை அன்று ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் - கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி நிகழ்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழப்போகிறது

    தனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு

    தனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு

    நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆனி மாதம் குரு பகவான் வக்ர கதியில் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். இதே போல குரு பகவான் ஐப்பசி மாதம் 30ம் நாள் 15.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேர்கதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஏழாம் பார்வையால் கடக ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார்.

    வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி

    வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி

    நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் மார்கழி மாதம் 11ஆம் நாள் 26 .12.2020 செவ்வாய்கிழமை அன்று சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு மாறும் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்.

    செவ்வாய், புதன்

    செவ்வாய், புதன்

    நவ கிரகங்களில் சில கிரகங்கள் வக்ரமடையும், அதிசாரமாக முன்னோக்கி நகரும். செவ்வாய் பகவான் ஆவணி மாதம் 24ஆம் தேதி முதல் புரட்டாசி 17ஆம் தேதி வரைக்கும், புரட்டாசி 19ஆம் தேதி முதல் ஐப்பசி 29ஆம் தேதி வரைக்கும் செவ்வாய் பகவான் வக்ர மடைகிறார். புதன் பகவான் ஆனி மாதம் 4ஆம் தேதி முதல் 28 வரைக்கும் புரட்டாசி 28 முதல் ஐப்பசி 18ஆம் தேதி வரைக்கும் தை மாதம் 17ஆம் தேதி முதல் மாசி 8ஆம் தேதி வரைக்கும் புதன்பகவான் வக்ரமடைகிறார். புதன் பகவான் சித்திரை 10 முதல் வைகாசி 4 வரைக்கும் ஆனி 8 முதல் 26 வரைக்கும் ஆடி 21 முதல் ஆவணி 16 வரைக்கும் அஸ்தமனம் அடைகிறார். அதே போல ஐப்பசி 3 முதல் 16 வரைக்கும் கார்த்திகை 11 முதல் மார்கழி 26 வரைக்கும் தை 19 முதல் மாசி 2 வரைக்கும் பங்குனி 24 முதல் வருட முடிவு வரை அஸ்தங்கமடைகிறார்.

    கிரக அஸ்தமனங்கள்

    கிரக அஸ்தமனங்கள்

    குருபகவான் வைகாசி 1 முதல் ஆவணி 28 வரை குரு பகவான் வக்ரமடைகிறார். தை 1 முதல் தை 30 வரை குரு அஸ்தங்கமடைகிறார். சுக்கிர பகவான்
    சித்திரை 30 முதல் ஆனி 11 வரைக்கும் வக்ரமடைகிறார். வைகாசி 16 முதல் வைகாசி 26 வரைக்கும் மாசி 10 முதல் வருட முடிவு வரைக்கும் சுக்கிரன் அஸ்தமங்கமடைகிறார். சனி பகவான் சித்திரை 28 முதல் புரட்டாசி 13 வரைக்கும் சனி பகவான் வக்ரமடைகிறார். மார்கழி 23 முதல் தை 27 வரைக்கும் சனி பகவான் அஸ்தங்கமடைகிறார்.

    நவகிரகங்கள் 12 ராசிகள்

    நவகிரகங்கள் 12 ராசிகள்

    கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும். அதற்கேற்ப பரிகாரங்கள், யாகங்கள் செய்து கொள்ளலாம். நவ கிரகங்களும் ஜனன ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப தோஷ பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவ கிரக தோஷங்களையும் போக்க யாகங்கள் தினசரியும் நடைபெறுகின்றன. சனிபகவான் மங்கள சனீஸ்வரராகவும், பாதாள சொர்ண சனீஸ்வரராகவும் அருள்பாலிக்கிறார். அதே போல குரு பகவான், ராகு கேது பரிகார தோஷங்களுக்கும் நிவர்த்தி செய்ய யாகங்கள் நடைபெறுகின்றன.

    English summary
    Planets Sani, guru, Rahu and kethu transit for the Tamil New year Sarvari 2020 -2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X