For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார்வரி புது வருடத்தில் மக்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் - தங்கம் விலை உயரும்

சார்வரி புது வருடத்தில் தங்கத்தின் விலை உயர்வடையும், மஞ்சள் நிற பயிர்கள் அபிவிருத்தி அடையும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. சுப காரியங்கள் அதிகம் நடைபெறும் என கணித்துள்ளது பஞ்சாங்கம்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த கால கட்டத்தில் சார்வரி புது வருடம் பிறக்கிறது. இந்த வருடம் மக்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும். வருமானம் வருமா? செலவுதான் அதிகரிக்குமா என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். இந்த ஆண்டு மக்களுக்கு ஆதாயத்தை விட விரையம் குறைவாகவே இருக்கிறது. இதேபோல பொதுமக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

சார்வரி வருடத்தில் நவ நாயகர்களாக இருப்பவர்கள் ராஜா புதன், மந்திரி சந்திரன், சேனாதிபதி, அர்க்காதிபதி மேகாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி குரு, ரஸாதிபதி சனி, நீரஸாதிபதி குரு, தானியாதிபதி செவ்வாய், பசு நாயகர் கிருஷ்ணர்.

சார்வரி வருடத்தில் ஸஸ்யாதிபதியாக, நீரஸாதிபதியாக குரு பகவான் இருப்பதால் வருண யாகம் செய்வதால் நாட்டில் குல தெய்வ அனுக்கிரகத்தினால் மழை பெய்யும். நெல், கோதுமை, கடலை போன்ற தானியங்களும் அதிகமாக பயிராகும். மஞ்சள், தங்கம் போன்ற பயிர்கள் அபிவிருத்தியாகும். தங்கம் விலை ஏறும். சுப காரியங்கள் அதிகமாகும் தங்கம் வெள்ளி பொருட்களின் தேவையும் அதிகரிக்கும். விற்பனையும் அதிகமாகும்.

மாணவர்களுக்கு வெற்றி

மாணவர்களுக்கு வெற்றி

ராஜா புதன் என்பதால் மிதமான மழை பெய்யும். அதிகமான காற்று வீசி மேகங்கள் களையும் பச்சை நிற பயிர்கள் அபிவிருத்தி அடையும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் அகில இந்திய தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். மந்திரி சந்திரனாக இருப்பதால் நாடடின் தென்கிழக்கு மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான மழை பெய்யும்.

வருண யாகம்

வருண யாகம்

சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதியாக சூரியன் இருப்பதால் நாட்டில் சொற்ப மழை பெய்யும், விலைவாசி, தண்ணீர் தட்டுப்பாடு, அரசியல் காரணங்களுக்காக நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். சிவப்பு நிற பொருட்கள் அபிவிருத்தி அடையும். காலத்தே பெய்ய வேண்டிய மழை குறைந்து உணவுத்தட்டுப்பாடு அதிகரிக்கும். நதிகளை இணைக்க அரசு முயற்சி செய்யும். விவசாயம் குறைந்து உணவுப்பஞ்சம் ஏற்படும். வருண யாகம் செய்தால் நல்ல மழை பெய்யும்.

மஞ்சள் நிற பொருட்கள்

மஞ்சள் நிற பொருட்கள்

ஸஸ்யாதிபதியாக, நீரஸாதிபதியாக குரு பகவான் இருப்பதால் வருண யாகம் செய்வதால் நாட்டில் குல தெய்வ அனுக்கிரகத்தினால் மழை பெய்யும். நெல், கோதுமை, கடலை போன்ற தானியங்களும் அதிகமாக பயிராகும். மஞ்சள், தங்கம் போன்ற பயிர்கள் அபிவிருத்தியாகும். தங்கம் விலை ஏறும். சுப காரியங்கள் அதிகமாகும் தங்கம் வெள்ளி பொருட்களின் தேவையும் அதிகரிக்கும். விற்பனையும் அதிகமாகும்.

துவரை அதிகரிக்கும்

துவரை அதிகரிக்கும்

தானியாதிபதியாக செவ்வாய் வருவதால் நாட்டில் மழை வளம் குறையும் நன்செய் பொருட்கள் உற்பத்தி பாதிக்கும். புன்செய் பயிர்கள் நன்கு விளையும். கடலை, துவரை போன்ற சிவப்பு நிற பொருட்கள் நன்கு விளையும் செங்கள் சூளைகளில் உற்பத்தி அதிகரிக்கும்.

வருமானம் அதிகம்

வருமானம் அதிகம்

இந்த ஆண்டு மேஷம் விருச்சிகம் ராசிகளுக்கு ஆதாயம் 5 விரையம் 5 ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 14 விரையம் 11, மிதுனம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 2 விரையம் 11 கடகம் ராசிக்கு ஆதாயம் 2 விரையம் 2, சிம்மம் ராசிக்கு ஆதாயம் 14 விரையம் 2, தனுசு, மீனம் ராசிக்கு ஆதாயம் 8 விரையம் 11 மகரம் கும்பம் ராசிக்கு ஆதாயம் 11, விரையம் 5. இந்த ஆண்டு மொத்த ஆதாயம் 56 மொத்த விரையம் 47 . இந்த ஆண்டு ஆதாயத்தை விட விரையம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும். சேமிப்பு அதிகமாக இருக்கும்.

மருத்துவ செலவு குறையும்

மருத்துவ செலவு குறையும்

இந்த ஆண்டு ஆரோக்கியத்தை விட அனரோக்கியம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். இந்த ஆண்டு முன்று மரக்கால் அளவு மழை பெய்யும். ஐந்தில் ஒரு பங்கு மழை பூமியிலும் பத்தில் மூன்று பங்கு மழை மலைகளிலும் காடுகளிலும் அரைபங்கு மழை சமுத்திரத்திலும் பெய்யும்.

English summary
Check out Tamil Puthandu Rasi palan Sarvari Tamil puthandu rasi palan 2020 -21 gold rate and food price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X