For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டை காக்க சத்ரு சம்ஹார யாகம் - கொரோனா தொல்லை ஒழிக்கும் யாகங்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 100 நாட்கள் ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாகம் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்று ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றி பெறுவதற்காக கோயில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை பெய்ய பல நேரங்களில் கோவில்களில் யாகம் நடத்தப்படும் அதே போல தற்போது கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க யாகங்கள் நடத்தலாம் என ஆலோசனை நடத்தப்படுகிறது. மறைந்த ஜெயலலிதா இதுபோன்ற சூழலில் மக்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும் சத்ரு சம்ஹார யாகங்களை நடத்தியுள்ளார். மகா சண்டி யாகங்கள் பல நேரங்களில் நடத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வரும் 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

 இன்றைய ராசி பலன் இன்றைய ராசி பலன்

சொர்ண ஆகார்ஷண பைரவர்

சொர்ண ஆகார்ஷண பைரவர்

இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் பைரவரின் ஆசிகளை பெறவும், தங்குதடையின்றி ஹோமம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு சிறப்பு ஹோமமும் விசேஷ ஆராதனைகளும், இன்று 22.06.2020 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

அன்ன தோஷம் நீங்கும் யாகம்

அன்ன தோஷம் நீங்கும் யாகம்

மேலும் இன்று 23.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அன்ன தோஷம் விலகவும், குறைவில்லா அன்னம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும், மேலும் பல நன்மைகளை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ லட்சுமி குபேர யாகம்

ஸ்ரீ லட்சுமி குபேர யாகம்

தொடர்ந்து மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தன தானிய விருத்தி பெறவும், பண கஷ்டங்கள் அகலவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரரை வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

பக்தர்கள் பங்கேற்பது எப்படி

பக்தர்கள் பங்கேற்பது எப்படி

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாருக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632513. Ph: 04172 230033 / 9443330203. Email : [email protected] .

எதிரிகள் தொல்லை ஒழியும்

எதிரிகள் தொல்லை ஒழியும்

ஒரு பக்கம் எதிரிகள் தொல்லை மற்றொரு பக்கம் நோய் பாதிப்பு இந்த இரண்டில் இருந்தும் மக்களை பாதுகாக்க நாம் கடவுளைத்தான் நாடவேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கூறி வருகின்றனர். இதுபோன்ற தொல்லைகள் நீங்க நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சத்ரு சம்ஹார யாகம் நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு எதிரான போரிலும் அண்டை நாடுகளுடனான தொல்லையில் இருந்தும் நாடு மீள யாகம் நடத்துவது சிறப்பாக இருக்கும் என்பதே ஆன்மீகவாதிகளின் ஆலோசனை.

{photo-feature}இன்றைய ராசி பலன்

English summary
Satru samhara yagam conduct in Sri Danvantri peedam to win the war against Corona. The government and medical team are working hard to control the corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X