• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனுசு ராசியில் குருவின் வீட்டில் சனியோடு கூட்டணி சேரும் கேது - யாருக்கு பாதிப்பு

|

சென்னை: நவகிரகங்களின் கூட்டணி, பார்வை ஆகியவற்றைப் பொருத்து அவருக்கு என்ன நோய் பாதிப்பு ஏற்படும் என்று கூறலாம். சனிபகவான் ஆயுள்காரகன், கேது பகவான் மோட்ச காரகன். சனியும், கேதுவும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் ஆன்மிகத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் ஒருசேரக் காட்டும் அமைப்பாகும். அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்குமிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தும். தோல் நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்துவார்.

மகரத்தில் உள்ள ஞான காரகன் கேது உடன் இப்போது களத்திரகாரகன் சுக்கிரன் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். சுக்கிரன் கேது சேர்க்கை கொண்டவர்கள் பொதுவாகவே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மையுடன் பல நல்ல குணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் அழகான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புவார்கள். கவிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள். இவர்களில் சிலர் ஜோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

மகரத்தில் உள்ள கேது இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசியில் அமர்வதால் சில பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள். சனியும் கேதுவும் பாப கிரகங்கள். இருவருமே கூட்டணி அமைத்து குருவின் வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளது அந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும் தோல் நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை தசாபுத்தி சரியாக இருந்தால் தப்பித்துக்கொள்வார்கள். ஜென்ம கேது சனி கூட்டணி ஒரு பக்கம் பாதிப்பு என்றாலும் ஏழாம் இடத்தில் உள்ள ராகு அள்ளிக் கொடுப்பார். இல்லற வாழ்க்கை படு சூப்பராக இருக்கும்.

Also Read | ராகு கேது பெயர்ச்சி 2019

சனி கேது கூட்டணி

சனி கேது கூட்டணி

ஒருவரின் ஜாதகத்தில் தனுசு ராசியில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிகத்தையே விஞ்ஞானப் பார்வையாக பார்க்கும் விவேகம் இருக்கும். நிறைய சொத்து சுகங்கள் இருந்தாலும் எதிலும் ஒட்ட மாட்டார்கள். மணிக்கணக்கில் பேசினாலும் அடிமனதை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டமாட்டார்கள். ரஜினிகாந்த் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் சனியும், கேதுவும் வலிமையாக உள்ளனர், எட்டாமிடத்தில் ராகு இருக்கிறார்.

குழப்பமான மனநிலை

குழப்பமான மனநிலை

ஏழில் இருக்கும் குரு, லக்னத்தை பார்ப்பது சிறப்பு என்றாலும் ரஜினிக்கு தடையாக இருப்பதும், அவரது நற்பெயருக்கு சோதனையாக இருக்கப் போவதும் இரண்டாமிடமும் ஏழாமிடமும் தான் கூடவே ஏழரை சனி. இரண்டில் உள்ள சனியும் கேதுவும் அவர் எதிலுமே அதிகம் பற்றில்லாதவர் என்பதையே காட்டுகிறது. இப்போது கோச்சாரப்படி ஏழரை சனியும் இணைந்துள்ளது முடிவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

முடிவுகள் மாறும்

முடிவுகள் மாறும்

இரண்டாமிட சனி கேது கூட்டணியின் காரணமாக, அவர் அவ்வளவு எளிதாக முடிவெடுக்க மாட்டார். எந்த விஷயத்தையும் செய்வதற்கு அளவுக்கதிகமாக தயங்குவார். அவரின் அரசியல் முயற்சிக்கு இந்த குணமே மிகப் பெரிய எதிரியாகும். இரண்டாமிட சனி-கேது கூட்டணியின் காரணமாக அவர் ஒரு வார்த்தை பேசினாலும் அது பெரும் விவாதமாகி விடும். இரண்டாமிட சனி -கேது கூட்டணி மற்றும் எட்டாமிட ராகு காரணமாக அவர் தன் முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். இதனால் அவர் அதிக விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிஇருக்கும். இந்த கிரகங்கள் கூட்டணி காரணமாக ரஜினியால் அவரது கட்சியில் குடும்ப ஈடுபாட்டைத் தவிர்க்க இயலாது வாக்குறுதிகளை சுலபமாக நிஜமாக்க முடியாது.

சனி கேது பாதிப்பை சமாளிக்க பரிகாரம்

சனி கேது பாதிப்பை சமாளிக்க பரிகாரம்

சனி கேது இணைவதால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க சிவபெருமானை தரிசனம் செய்யலாம். பிரதோஷ கால பூஜையில் பங்கேற்கலாம். பவுர்ணமியில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் வரலாம். சனிக்கிழமைகளில் கிரிவலம் வர சனி தோஷமும், கேதுவினால் ஏற்படும் பாதிப்புகளும் விலகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Ketu is more powerful in the above conjunction than person will lose interest in material life and choose to follow spiritual one. But this will come after a lot of internal conflict as both Saturn and Ketu will try to drag the native into its own direction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more