• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு

|
  16-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

  சென்னை: சனியும் செவ்வாயும் பகையாளிகள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் பிரச்சினைதான். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதும் கூட. இவை இரண்டும் சேருவது, பார்ப்பது அந்த வீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும். நந்தி வாக்கியம், பிருஹத் ஜாதகம், உத்தரகாலாமிர்தம் போன்ற ஜோதிட நூல்கள் சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் பார்வை பற்றி பலவித விளக்கங்களை கூறியுள்ளன. இன்னும் சில தினங்களில் கன்னி ராசிக்கு வரும் செவ்வாய் தனுசு ராசியில் உள்ள சனியை பார்க்கப் போகிறார்.

  வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்னைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் மேல் கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாதல் என பல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

  சனி செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் எந்த ராசியில் கூட்டணியாக இருந்தாலும் ஆபத்தானது என்கிறது ஜோதிட நூல்கள். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் சூறாவளியை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்னையாலும் உண்டாக்கும். நீதிமன்றத்தில், எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.

  செவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு

  செவ்வாய் சனி கூட்டணி

  செவ்வாய் சனி கூட்டணி

  வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம். செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம்.

  ஆயுள் ஆரோக்கியம்

  ஆயுள் ஆரோக்கியம்

  மந்தமாக போகும். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக வெளிப்படுத்துவார்கள். அணுகுண்டே வெடிச்சாலும் எதுவும் நடக்காதது போல ஆகாயம் பார்த்தபடி இருப்பவர்களே சனி ஆதிக்கமுள்ளவர்கள்.

  ஆயுட்காரகன் சனி என்றால், ஆரோக்யகாரகன் செவ்வாய். அதர்மத்தையும் தாங்கிக் கொள்ளுமளவுக்கு சகிப்புத்தன்மைக்குரியவர் சனி என்றால், தர்மத்தைக் காக்க அதர்மத்தை வேரோடு பெயர்க்கும் கிரகமே செவ்வாய்.

  கிரகச்சேர்க்கையால் பாதிப்பு

  கிரகச்சேர்க்கையால் பாதிப்பு

  ஒரு மனிதருக்கு இந்த இரண்டு குணங்களுமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் அத்தியாவசியமாகிறது. ஐம்புலன்களையும் முறுக்கேற்றி வீராவேச வேட்கையுடன் வாழ்க்கையை நடத்த வைப்பது செவ்வாய் என்றால், நெறிப்படி வாழ வைத்து அடுத்த தலைமுறையையும் பேச வைக்கும் ரோல்மாடலாக மாற்றுபவர் சனி. மேற்கண்ட இரு குணங்களும் ஒருவருக்குள் முட்டி மோதிக் கலந்திருக்கும்போது என்ன நிகழுமோ, அதுதான் சனி - செவ்வாய் சேர்க்கையாகும். அதனால், இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் தரமுடியும்.

  சனி செவ்வாய் ஏழாம் வீடு

  சனி செவ்வாய் ஏழாம் வீடு

  சனி செவ்வாய் லக்னத்தில் ஏழாமிடத்தில், சேர்க்கை பெற்றவர்கள் அல்லது ஐந்தில் சனி,ஏழில் செவ்வாய் நிற்க, அவர்கள் யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு பகை உணர்வு இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். உதாரணமாக ஒரு ஆண் ஜாதகத்தில் மேற்சொன்ன அமைப்பில், சுபர்கள் பார்வையின்றி சனி செவ்வாய் சேர்க்கை பெற்று இருக்கும்பொழுது, அவர்களுக்கு யார் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார்களோ, அந்த ஒருவரை தவிர மற்ற யாரையுமே அவர்கள் நம்ப மாட்டார்கள்.

  தம்பதிகள் பிரச்சினை

  தம்பதிகள் பிரச்சினை

  அந்த ஒருவரும், இவர் மேல் முழு அன்பு வைத்து இருப்பார்களா?? என்பது சந்தேகமே. மேலும் இந்த அமைப்பு இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் முற்பாதியில் மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாமல், பிற்பாதியில் புரிந்துகொண்டு துயரப்படும் சூழல் உருவாகும். மேலும் இவர்கள் மனைவியின் சாபத்தை பெறுபவர்கள் ஆவார்.

  குரு சுக்கிரன் பார்வை பலம்

  குரு சுக்கிரன் பார்வை பலம்

  கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இயற்கையாகவே ஏழாம் இட அதிபதி சனியாக வருவதால் அவர்களுக்கு இந்த அமைப்பு இருந்தால், கண்டிப்பாக அவர்கள் மனைவியை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவர்கள் கௌரவத்திற்காக 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், திருப்திகரமான திருமண வாழ்க்கை இவர்களுக்கு இருக்காது. ஜோதிடத்தில் விதிவிலக்கு பெரும்பங்கு அளிப்பதால், சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில், குரு போன்ற சுப கிரகங்கள் களத்திர ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளும் போதும், மேற்கூறியவற்றில் இருந்து மாறுபட்ட பலன்களும் நடக்கும்.

  நரசிம்மர் வழிபாடு

  நரசிம்மர் வழிபாடு

  இந்த கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பரிகாரம் இருக்கு வீர்யம் மிக்கதுமாகும். பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். அதனால் உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு இதற்கு முக்கியமாகும். எனவே, நரசிம்மர் ஈசனை தரிசிக்கும் அல்லது வணங்கிய கோயில்களுக்குச் சென்று வருதல் நல்லது. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள நரசிங்கம்பேட்டை தலத்தில் அருளும் நரசிம்மர் வணங்கிய சுயம்புநாதரை வணங்கி வாருங்கள். இத்தலத்திலேயே அமைந்துள்ள யோக நரசிம்மரின் ஆலயத்திற்கும் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்

   
   
   
  English summary
  Mars - Saturn conjunction denotes a conjunction of hot and cold. Mars gives the energy to fulfill needs and Saturn is the control, which is necessary for eventual efficiency in our expression and growth. During the Mars - Saturn conjunction, the essential energies fight with necessary controls. This conjunction often results in a stalemate or indecision.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X