• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி வக்கிரம் - எந்த ராசிக்கு நன்மை? யாருக்கு பாதிப்பு - பரிகாரம்

|

சென்னை: சனி வக்கிரம் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். 12 ராசிகளுக்கு சனிபகவான் வக்கிர பலன்களைப் பார்க்கலாம்.

சனிக்கு மகரம்,கும்பம் சொந்த வீடு.துலாம் உச்ச வீடு. மேஷம் நீச வீடு. ஒருவரது ராசியில் சனி திசை 19 ஆண்டுகள். சிலருக்கு பெரும் நன்மையையும்,சிலருக்கு பெரும் கெடுதலையும் செய்வார் சனி பகவான்.

சனிதான் ஆயுள் காரகன். சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். சனி வக்கிரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.

சனி வக்ரம் எப்படி?

சனி வக்ரம் எப்படி?

சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ரமாகச் செல்கிறார். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும்.

மேஷம்

மேஷம்

சனிபகவான் இப்போது தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். இப்போது சனிபகவான் வக்கிரகாலமாகும். இந்த கால கட்டத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

ரிஷபம்

ரிஷபம்

இதுநாள் வரை தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்

மிதுனம்

இந்த கால கட்டத்தில் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

கடகம்

கடகம்

இந்த காலத்தில் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படும், இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். கடன் பிரச்னையால் தொல்லை ஏற்படும். நோய்கள் தீரும். வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை ஏற்படும். பாதிப்புகள் தீர சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி

தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வெற்றிலை மாலை போட்டு வணங்கும்.

துலாம்

துலாம்

மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர பாதிப்புகள் தீரும்.

தனுசு

தனுசு

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பெருமாள் கோவில்களுக்கு சென்று வணங்கி வரலாம்.

மகரம்

மகரம்

அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

கும்பம்

கும்பம்

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.

சனி பாதிப்புகள் பரிகாரம்

சனி பாதிப்புகள் பரிகாரம்

சனி வக்கிரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். ஆயுளைக்குறைப்பார். ஆதிபத்ய சிறப்பில்லாத சனி சுப பலனைத் தருவர். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். உடல் முழுவதும் விதவிதமான பிரச்சனைகள் எற்படும். சனி வக்ரத்தினால் பாதிப்பு குறைய பறவைகள்,விலங்குகள்,ஆதரவற்ரோர்,ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் செய்யலாம். சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

 
 
 
English summary
Saturn becomes Retrograde On April 29,2018 Saturn becomes Progressive On September 11, 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X