For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்ட ஆயுள் வாழ ஆசையா? - இந்த பாரிகாரம் செய்யுங்க

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ ஆசைப்படுபவர்கள் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்கண்ட அம்சங்களை நாம் பார்க்கவேண்டும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர். சகோதரி யமுனை.

சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது. ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும்.

ஜாதகத்தில் சனி பகவான்

ஜாதகத்தில் சனி பகவான்

ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்கண்ட அமசங்களை நாம் பார்க்கவேண்டும்.

லக்னத்துக்கு எட்டாம் இடம், லக்னத்துக்கு மூன்றாம் இடம் லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் இடத்தில் நின்ற கோள்கள், சூரியன், ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான். இவர்களை கவனிக்க வேண்டும் . லக்னாதிபதியும் சூரியனும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகமானால் ஆயுள் தீர்க்கம்.

லக்னாதிபதுயும் சூரியனும் சமமானால் மத்திமமான ஆயுள். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகமானால் அற்ப ஆயுள். அற்ப ஆயுள் என்றால் அந்த ஜாதகன் 32 வயது மட்டுமே வாழ்வான். ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்

மரணம் நேரும் காலம்

மரணம் நேரும் காலம்

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் . ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் நேர்ந்து விடுகிறது. இந்த மாரகாதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்க்கு அமைந்து நிற்க்கும் போது மரணத்திற்க்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6/8/12 அதிபதிகளின் தொடர்பு கொள்ளும்போது மரணம் நிகழ்ந்துவிடுகிறது.

உங்களின் மரணம் எப்படி?

உங்களின் மரணம் எப்படி?

மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்க்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பை பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.
சூரியன் அல்லது குருவின் சேர்கை பெற்றால் புனித தினங்களிலோ அல்லது கோயில் போன்ற தெய்வீகத்தன்மைகள் நிறைந்த
இடத்தில் நிகழும்.

•சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகமான மரணமும் மருத்துவமனை போன்ற இடங்களிலு பலர் சேவை செய்ய மரணம் நிகழும்.

•சனி சேர்க்கை பெற்றால் பொது இடங்களிலிலோ அல்லது தர்ம ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலோ மரணம் நிகழும்.

•சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயனத்திலோ மரணம் நிகழும்.

•செவ்வாய் சேர்க்கை பெற்றால் விபத்துகளாலும் அகால மரணமும் புதன் சேர்க்கை பெற்றால் அவஸ்தைகளுடன் கூடிய மரணமும் நிகழும்.

•ராகு/கேது தொடர்பு கொண்டால் விபத்து, விஷ ஜெந்துகளாலொ அல்லது விஷமருந்துதல், தற்கொலை போன்றவையும் நிகழும்.

•மாந்தி தொடர்பு கொண்டால் உடல் சிதைந்த நிலையிலான மரணம் நிகழும். எனவே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்பதை உணர்ந்து "எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான் அவன் சதாசிவ பக்தனென்றால் தொடமாட்டான்" என அறிந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் எமவாதனை இன்றி அமைதியான மரணம் நேரும்.

ஆயுள் வளர்க்கும் பரிகாரங்கள்:

ஆயுள் வளர்க்கும் பரிகாரங்கள்:

•ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்வது.

•வருடம் தோரும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வது.

•எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்குவது.

•எமனை சாம்பலில் இருந்து உயிர்ப்பித்த திருச்சி திருப்பைஞ்சிலி ஸ்ரீ ஞீலிவண நாதர் ஆலயத்திற்க்கு சென்று பிறந்த நாளில் ஒருமணி நேரமாவது தியான வழிபாடு செய்வது.
•காசியைவிட வீசம் அதிகம் என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியத்தில் வாஞ்சிநாதேஸ்வரரை தரிசிப்பது மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்வது.

•இவற்றோடு உடல் ஆரோக்யத்தை காக்க வருமுன் காக்க சரியான ஆரோக்யமான உணவு முறைகளையும் வருடம் தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்துக்கொள்வது மற்றும் தேவையான அளவு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பிடு ஆகியவற்றை காலாவதியாகாமல் வைத்துக்கொள்வது.

English summary
The Saturn Cycle is an important part of astrological interpretation.The Secondary determinants of death are the benefic planets in association with lords of 2nd and 7th house or the lords of the 3rd and 8th house, or the lord of the 3rd or the 8th associating with the lord of the 2nd or the 7th house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X