For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிக்கிழமையில் சத்தியநாராயன விரதம் புணர்ப்பு தோஷம் போக்கும்.

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரத பூஜையாகும்

சத்தியநாராயணா விரத பூஜை:

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாலக்ஷமியின் நாயகர்

satyanarayan puja is performed to seek blessing of god vishnu

மகாவிஷ்ணுவின் திருப்பெயரே ஸ்ரீ சத்தியநாராயணர் ஆகும். சத்தியநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம்.

சத்தியநாராயணா பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

ஸ்ரீ சத்ய நாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார். இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார். அதற்கு அவர் கலியுகத்தில் சத்தியநாராயண விரதம் பலன் அளிக்க கூடியது. ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்.

இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம். பொதுவாக பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதால் பௌர்ணமியில் அனுஷ்டிக்கபடுகிறது.

சனி-சந்திர சேர்க்கை:

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில்

ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா?

புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும்

எது எப்படியோ! புணர்ப்பு தோஷம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

புணர்ப்பு தோஷத்திற்க்கு விதிவிலக்கும் பரிகாரமும்:

1. குரு பார்வை/சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் தோஷம் கிடையாது.

2. குரு வீட்டில் சனி சந்திர சேர்க்கை பெற்று புணர்ப்பு ஏற்பட்டிருந்தால் தோஷமில்லை.

3. சனியின் எதிரியான சூரியன் மற்றும் செவ்வாய் அல்லது லக்ன மற்றும் ராசியின் யோகாதிபதி, இவர்கள் சந்திரன் மற்றும் சனியின் இடையே நிற்க. புனர்பு தோஷ பங்கம் ஏற்படுகிறது.

4. சுக்கிரனின் வீட்டில் புணர்ப்பு பெற்றால் தோஷம் நீங்குவதோடு மிகப்பெரும் புகழை தந்துவிடுகிறது.

பரிகாரம்:

1. "சனி நாளுக்கிணங்கி கல்லிலே இறங்கி சிலையாக நிற்கின்றாய் கோவிந்தா" எனும் திருமதி M S சுப்புலக்ஷமி அம்மையாரின் வரிகளுக்கேற்ப்ப சந்திர ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதி தரிசனம் சனிக்கிழமையில் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

2. சனிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாளில் சத்தியநாராயண விரத பூஜை செய்வது சனி-சந்திர சேர்க்கையால் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி மகிழ்ச்சியான வாழ்வை அளிக்கும்.

நேற்று வரை நீசமடைந்த சந்திரன் சனைஸ்வரனுடன் சேர்க்கை பெற்று இருந்த நிலையில் இன்று சந்திரன் குரு வீடான தனுர் ராசிக்கு நகர்ந்ததும் சனி-சந்திர சேர்க்கை நீங்கியதோடல்லாமல்

சூரியனின் சமசப்தம பார்வையால் பௌர்ணமி யோகம் பெற்றதோடு செவ்வாயை சம-சப்தமமாக பார்த்து சந்திர மங்கள யோகத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Satya means Truth. Narayan means the one that abides in everything and everybody. Therefore, this puja, or the worship of Satyanarayan, a form of the Lord Vishnu, suggests that to overcome problems and difficulties in life caused either due to deeds of previous birth or similar factors can be overcome by worshipping the lord of Truth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X