For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம்- கணவன் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம் #Shivratri

சாவன் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

Google Oneindia Tamil News

ஹரித்துவார்: ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடியில் தொடங்கி மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. வட இந்தியாவில் ஆடி மாதத்தை சாவன் என புனிதமாதமாக கடைபிடிக்கின்றனர். இந்த மாதத்தில் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து சிவன் கோவிலில் சிவனுக்கு நேரடியாக அபிஷேகம் செய்கின்றனர். சாவன் மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல்நாள் மகாசிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. கணவன் ஆயுள் அதிகரிக்க வட இந்திய பெண்கள் இந்த விரதம் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மாசி மாதம் மகாசிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதே போல வட இந்தியாவில் சாவன் என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்.அந்த மாதத்தில் திங்கட்கிழமை, பிரதோஷம், மகாசிவராத்திரி நாட்களில் கங்கையிலிருந்து, காவட் மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வட இந்தியர்களின் பழக்கம்.

ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளியில் தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும் வட இந்தியாவில் சாவன் புனித மாதம் பிறப்பு நாளிலும் திங்கட்கிழமை நாட்களிலும் நேற்று இரண்டவது திங்கட்கிழமை சோமவார பிரதோஷம் நாளாகும். சாவான் பக்தர்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

சித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் சித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்

தமிழ்நாட்டில் ஆடி வட இந்தியாவில் சாவன்

தமிழ்நாட்டில் ஆடி வட இந்தியாவில் சாவன்

சாவன் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இன்று சாவன் மாத மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கோவிலுக்கு வெளியே வரிசையில் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

இதேபோல், டெல்லியிலும் சாவன் மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி பகுதியில் உள்ள மஹாகாளேஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கங்கை நீரை எடுத்து வந்து நீண்ட வரிசையில் நின்று அபிஷேகம் செய்தனர்.

சக்தி மாதம் சாவன்

சக்தி மாதம் சாவன்

ஆடி மாதத்தில் அம்பிகை பார்வதி தவமிருந்து சிவனை மணம்முடித்தார். அம்பிகையை தவத்தை மெச்சி தனது உடலின் ஒருபாகத்தை சக்தி அளித்தார், ஆடி மாதம் அம்மன்மாதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் சிவனை சிறப்பிக்கும் விதமாக சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக இம்மாத சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கணவன் ஆயுள் அதிகரிக்கும் என்பது வட இந்திய பெண்களின் நம்பிக்கை.

ஹரித்துவாரில் கூட்டம்

ஹரித்துவாரில் கூட்டம்

சாவன் மாதத்தில், சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள்.

நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள், ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை சேமித்து தோள்களில் சுமந்து செல்வர். அவ்வாறு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வர். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர்.

ஹரித்துவாரில் கோடிக்கணக்கான பக்தர்கள்

ஹரித்துவாரில் கோடிக்கணக்கான பக்தர்கள்

வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி துவங்கியது. இந்நிலையில் ஹரித்வாரிலுள்ள சிவாலயத்தில் சோமவார பிரதோச தினமான நேற்றும் மகாசிவராத்திரி தினமான இன்றும் கோடிக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று மகாசிவாராத்திரி கொண்டாடப்படுகிறது. கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். கன்வார் யாத்திரைக்காக ஹரித்வாரிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


English summary
The occasion and month of Sawan Shivratri or Maha Shivratri is considered extremely auspicious for Hindus who observe it by fasting and worshiping Lord Shiva. As per the Hindu calendar, Maha Shivratri comes every year between the months of July and August. This year it falls on 30 July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X