For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்க

சந்திரன் குளுமையானவன். சந்திரனின் குளிர்ச்சியான ஒளிக்கு மயங்குபவர்கள் ரசித்துக்கொண்டே இருக்கின்றனர். சந்திரன் வசீகரிப்பது போலவே உடல் வசீகரம், முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரனை நிர்ணயித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    08-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: சந்திரன் தேயும் மறையும். கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரன் குளிர்ச்சி பொருந்தியவன். வசீகரமானவன் என்பதால்தான் உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரனை நிர்ணயித்துள்ளனர். சந்திரன் எப்பொழுதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதில்லை 15 நாட்கள் தேய்ந்து 15 நாட்கள் வளர்கிறார். மனித மனமும் சந்திரனைப் போல சஞ்சலங்கள் நிறைந்ததுதான்.

    ராசிகளில் மிக முக்கியமான ராசி கடகம். காரணம் ராசியை தீர்மானிக்கும் சந்திரனின் வீடு இது. கடகம் ராசியின் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல் கடக ராசிக்காரர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த கடக ராசிக்காரர்கள் வெற்றியாளர் தான்.
    தன்னம்பிக்கை,அன்பு செலுத்தும் ஆற்றல்,அமைதி மற்றும் தன்னை தானே ஊக்க படுத்தி கொள்ளல் போன்ற குணங்கள் கடக ராசிக்காரர்களின் வாழ்வை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும். எம்பெருமான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த ராசி. அப்பன் சிவன் தலையில் சூடி இருப்பதும்,திருமலைவாசன் திருவேங்கடமுடையான் கண்களாய் கொண்டிருப்பதும் சந்திரனை தான்.அப்படிப்பட்ட சந்திரனின் வீடாகிய கடக ராசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்கலாம்.

    கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு.

    ஒளி காரகன் சந்திரன்

    ஒளி காரகன் சந்திரன்

    சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிகளும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

    கடக ராசிக்காரர்கள் குணம்

    கடக ராசிக்காரர்கள் குணம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பலசாலிகள்,தைரியசாலிகள்,அறிவாளி,புத்திக்கூர்மையானவர். கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுபவர். நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும். குடும்ப பாசம் உடையவர். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர். இரவில் பலம் உள்ளவர். சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.

    அரசாளும் தகுதி படைத்தவர்

    அரசாளும் தகுதி படைத்தவர்

    அதிக சிந்தனை படைத்தவர்,குடும்ப வாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர். தாய்மை உணர்வு உடையவர், தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர். கவிஞர், கலைஞர் எழுத்தாளர்களாக புகழ் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர். சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர். முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர். விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காத குணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.

    நகைச்சுவை பேச்சாளர்

    நகைச்சுவை பேச்சாளர்

    உயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவர். தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடு பேசும் ஆற்றலால் உலகம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர். முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம். ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கை, இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். பணத்தினாலேயே விரோதம் ஏற்படும். ஆடம்பர செலவு செய்வார்கள்.

    சந்திரன் காரகம்

    சந்திரன் காரகம்

    தாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான். கடவ் நீர் நிலைகளை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது, நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்திரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் அரிசி வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக்கூறப்படுகிறது. தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உறுப்பாகும்.

    சந்திரனின் தன்மை

    சந்திரனின் தன்மை

    பால் வெண்மை நிறத்தில் சுரக்கும் திரவம் என்பது குறைப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது. சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும்.

    கடக ராசிக்காரர்களின் வெற்றி

    கடக ராசிக்காரர்களின் வெற்றி

    மதியின் முகத்தை போல் மனமும் மாறிய படியே இருக்கும். வெற்றி பெற தேவையான எந்த தகுதியும் என்னிடம் இல்லையோ என்கிற எண்ணம் அடிக்கடி வந்து போகும். பணமில்லை திறமையில்லை என்றெல்லாம் கூட நினைப்பதுண்டு. நமக்கு சொந்தமானவற்றை பிறர் கவர்ந்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் இருந்தவாறே இருக்கும். இது போன்ற அதீத எண்ணங்களே உங்களை உள்நோக்கி சென்று பார்க்க வைத்து உங்களை நீங்களே கவனித்து கொள்ள வைக்கும். தற்காத்து தன்னம்பிக்கை பெறுவது அவசியம். எல்லா தகுதியும் தனக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த எந்த ஒரு கடக அன்பரும் வெற்றியாளர் தான். தன்னம்பிக்கை,அன்பு செலுத்தும் ஆற்றல்,அமைதி மற்றும் தன்னை தானே ஊக்க படுத்தி கொள்ளல் போன்ற குணங்கள் உங்கள் வாழ்வை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.

    English summary
    Cancer Strengths Tenacious, highly imaginative, loyal, emotional, sympathetic, persuasive. Weaknesses Moody, pessimistic, suspicious, manipulative, insecure.Cancer isn’t the type to half ass things when it comes to love and in a relationship they make for an incredibly intense and passionate partner.Being loved by a Cancer is unlike quite anything else and it has the power to make a person feel alive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X