For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனந்த வாழ்வு தரும் ஸ்ரீசக்திபீட யாகம், சீதா கல்யாணம்

Google Oneindia Tamil News

வாலாஜாபேட்டை: திருமண தடை நீங்கும் சீதா கல்யாணம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. சனி,ஞாயிறு கிழமைகளில் நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், தனாகர்ஷண யக்ஞம், 51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம் 108 லக்ஷ்மி பூஜையும் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சனிக்கிழமையன்று கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் ஸ்ரீவித்யா ஹோமம் நடைபெற உள்ளது. தனாகர்ஷண யக்ஞம், 51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம், சீதா கல்யாணம்,108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் நடைபெற உள்ளன.

Seetha kalyanam at Sri danvantri peedam

சிறுநீர் சம்பந்தமான நோய்கள், எலும்புருக்கி நோய் நீங்கி ஆயுள் பலம் கூட, நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெற வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 25.05.2018 ஏகாதசி திதியில் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது.

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அவரது பிராச்சத்த்தைப் பெற்று உண்டால் நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. அவருக்கு அபிஷேகம் செய்து அந்தத் தீர்த்தத்தை உட்கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேத்த்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி,. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் தன்வந்திரி பகவான். ஒன்றென ஒருவராக உள் வந்து அமர்ந்தார். இன்று ஓங்கி உயர்ந்த ஒரு பீடத்தையே தனக்கென ஸ்தாபித்துக் கொண்டு விட்டார். தேசமெங்கும் இவருக்கும் பக்தகோடிகள். உலகெங்கிலும் இருந்து இவரை தரிசிக்க அன்பர்கள் தேடி வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 25.05.2018 வெள்ளிக் கிழமையில் ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்பட்டது.

27.05.2018 ஞாயிறுக் கிழமை காலை 8.00 மணி முதல் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கல் வைத்து மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜையும், 09.00 மணிக்கு நவீன கோசாலை திறப்பு விழாவும், 10.00 மணிக்கு தனாகர்ஷண யக்ஞத்துடன், பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்கும் 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 51 சக்தி பீட யாகமும், ஸ்ரீ ஆரோக்யல்க்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளன.

காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீசந்த் முரளிதாஸ் பாகவதர், பொழிச்சலூர், சென்னை அவர்கள் நிகழ்த்தும் சீதா கல்யாண வைபவமும், மாலை 6.00 மணிக்கு 108 பெண்கள் பங்கேற்கும் 108 லக்ஷ்மி பூஜையும் நடைபெற உள்ளது. இதில் காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம், ஸ்ரீமாதா பாலானந்த ஸ்வாமிகள், கொடுமுடி ஆட்சி பீடம் மாதாஜி ராணியம்மாள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளனர்..

பூஜை மற்றும் ஹோமத்தின் பலன்கள் :

இப்பூஜை செய்பவருக்கும், ஏற்பாடு செய்தவருக்கும், மற்றும் அதை காண்பதற்கும், பங்கேற்பதற்கும், கைங்கர்யம் செய்வதற்கும் அம்பிகையின் அருள் இருந்தால் மட்டுமே அது நடக்கும். இப்பூஜையில் பங்கேற்பவர்களுக்கு மேற்கண்ட தெய்வங்களின் அருள் கிடைத்து வாழ்வில் எல்லா நலங்களுடன் சீரும் சிறப்புடன், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வர். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203.

English summary
Seetha kalyanam and 108 laksmi pooja at Sri Dhanvantri peedam at Walajapet, Vellore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X