For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணம்: நீல நிலவு... ரத்த நிலவு... என்ன செய்யலாம்? எதை தவிர்க்கலாம்?

சூப்பர் ப்ளூ ப்ளட் சந்திர கிரகணம் ஜனவரி 31ஆம் தேதியன்று 150 ஆண்டுகளுக்குப்பின் வானியல் அற்புதம் நிகழ் உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ப்ளூ ப்ளட் சந்திர கிரகணம்

    சென்னை: 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வானியல் அற்புதத்தை ஜனவரி 31ஆம் தேதி நாம் காண இருக்கிறோம். அது சூப்பர் நீல ரத்த சந்திர கிரகணம். இந்த நாளில் என்ன செய்யலாம்? எதைத் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சியாளர்கள், வானியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த நிகழ்வைக் காண ஆவலாய் காத்திருக்கின்றனர். அன்றைய தினம் மூன்று தனித்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஒருசேர காண இருக்கிறோம்.

    சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம் வழக்கமான நிலவொளியைக் காட்டிலும் 14% கூடுதல் வெளிச்சத்தை சந்திரனிடம் அன்று காணலாம்.

    2வது பௌர்ணமி

    2வது பௌர்ணமி

    ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினை காண முடியும், ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால் இந்த முறை ஜனவரி 1ஆம் தேதியே முழு நிலவு தோன்றியது, மிகவும் அரிதாக மாதக் கடைசியான 31ஆம் தேதி இரண்டாவது முறையாக முழுநிலவு தோன்ற உள்ளது. இதுவே ப்ளூ ப்ளட் மூன் என்று அழைக்கப்படுகிறது.

    ப்ளூ ப்ளட் மூன்

    ப்ளூ ப்ளட் மூன்

    இந்த முழுநிலவை அரிதிலும் அரிதான தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. அன்றைய தினம் முழு சந்திர கிரகணம் தோன்ற இருக்கிறது. அதாவது பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும். இதுவே ப்ளூ மூன் சந்திர கிரகணம் எனப்படுகிறது.

    வானில் அதிசயம்

    வானில் அதிசயம்

    31ஆம் தேதி, மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தோன்ற ஆரம்பிக்கும், முழு கிரகணம் 6.21 மணிக்கு தொடங்கி 7.37 மணி வரை நீடிக்கும். மொத்தம் 1 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடிக்கும் என்று கொல்கத்தா பிர்லா கோளரங்க இயக்குனர் கூறியுள்ளார்.பொதுமக்கள் இதனைத் காண சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ ப்ளட் சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

    ரத்த சந்திரன்

    ரத்த சந்திரன்

    ஒரே மாதத்தில் வருகிற இரண்டாவது பவுர்ணமியை ப்ளூ மூன் என்று அழைக்கும் அதே நேரத்தில் பவுர்ணமியன்று ஏற்படுகிற முழு சந்திர கிரகணத்தை ப்ளட் மூன் என்று அழைக்கிறார்கள். இதன் போது அதாவது அந்த சந்திர கிரகணம் ஏற்படும் நேரத்தில் நிலா சிகப்பு நிறத்தில் தெரியுமாம் அதனால் இதனை ப்ளட் மூன் என்று அழைக்கிறார்கள்.

    சக்தி வெளிப்படும்

    சக்தி வெளிப்படும்

    இந்த சந்திர கிரகணத்தின் போது ஒரு வித சக்தி வெளிப்படும், இந்த கதிர்வீச்சு பாதிக்கக் கூடாது என்றுதான் கர்பிணிகள் கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது என்றும் திதி கொடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். சிலர் சில உணவு வகைகளைக் கூட தவிர்க்கச் சொல்வார்கள். இந்த கிரகணத்தின் போது சிலருக்கு தோஷங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

    உறவில் ஈடுபட வேண்டாம்

    உறவில் ஈடுபட வேண்டாம்

    கிரகண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.

    உடலை வருத்தும் செயல்களை செய்ய வேண்டாம். ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
    புதிதாக திருமணமான தம்பதிகள் அன்றைய தினம் உறவில் ஈடுபடக்கூடாது என்பது ஜோதிடர்களின் அறிவுரை.

    English summary
    On Jan. 31, 2018, the super blue blood moon arrives with a lunar eclipse. This will be a particularly potent moment for every sign, with the cosmological gesture propelling people forward into the next phase of life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X