• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூடு வரவழைக்கும் மூளை... காதலை தூண்டும் கிரகங்கள் எவை தெரியுமா?

By Mayura Akilan
|

சென்னை: இன்பத்தை அனுபவிக்க ஆண்களை விட பெண்களே அதிகம் மூளையை உபயோகிக்கிறார்களாம். இது சமீபத்தில் கனடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜாதகத்தில் கட்டங்களில் உள்ள கிரகங்களின் நிலையைப் பொருத்து ஒருவரின் காதல், காம வாழ்க்கையை அறியலாம். திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இவற்றை கவனத்தில் வைத்தே பார்க்கின்றனர்.

ஒரு மனிதனின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கு வீரிய நாயகன் செவ்வாய்பகவான் காதல் காரகன் சுக்கிரபகவான் மற்றும் மனோகாரகன் சந்திரபகவான் இந்த மூன்று கிரகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. செவ்வாய்கிழமை சுக்கிரனின் பார்வை ஜாதகரின் மீது தீவிரமாக இருந்தாலோ, அல்லது வெள்ளிக்கிழமை செவ்வாய் பகவானின் சேர்க்கை, சந்திரனின் சஞ்சாரம் இருந்தாலே அன்றைக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும்.

காம எண்ணம் ஆண், பெண் இருவருக்கும் வேறுபட்டு இருக்கும். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. காதல், காம உணர்ச்சிகளை தூண்டுவதற்கு கிரகங்கள் எவ்வாறு துணை செய்கிறதோ அதே போல மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

உற்சாக எண்ணங்கள்

உற்சாக எண்ணங்கள்

ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் காம உணர்வு ஆசை உண்டாவது கிடையாது. ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும் பெண்களுக்கு மாலை மங்கும் நேரங்களிலும் தான் உறவு கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாகுமாம். தாம்பத்திய உறவை பொருத்தவரையில், ஆண்,பெண் இருவருடைய ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம்.

கரைபுரளும் உற்சாகம்

கரைபுரளும் உற்சாகம்

உச்சகட்டத்தை எட்டிய பெண்கள், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் கற்பனைத் திறனுடனும் தங்களுடைய வேலைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற பல ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. முதல் நாள் இரவு துணையுடனான உறவில் உச்ச கட்டத்தை எட்டும் பெண் அடுத்த நாள் முழுக்க புன்னகையுடன் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மகிழ்ச்சியோடு பழகி, வேலையைப் பகிர்ந்து செய்வார்களாம்.

மூளை நரம்பு நாயகன்

மூளை நரம்பு நாயகன்

புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

அதில் எப்படி?

அதில் எப்படி?

ஜாதகத்தில் மூன்றாமிடம் வீரியத்தை பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் அவரது செக்ஸ் வலிமையினை பற்றி புரிந்து கொள்ள இந்த இடம் உதவி செய்கிறது. நான்காமிடம் ஜாதகத்தில் காம இன்பத்தை அனுபவிக்க கூடிய சுகத்தினையும் ,அந்தரங்க வாழ்வினை பற்றி அறிய உதவுகிறது.

அழகானவர்கள்

அழகானவர்கள்

ஐந்தாமிடம் காமம் வயப்படும் நிலை,உடல் கவர்ச்சி,அங்க அவயங்கள் காம உணர்வினை பிறருக்கு தூண்டும் வகையில் தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல் மற்றும் மனைவி மீது மோகம் கொள்ளுதல் ஆகியவையை வெளிப்படுத்தும்.

படுக்கை சுகம்

படுக்கை சுகம்

ஜாதகத்தில் ஏழாமிடம் களத்திர ஸ்தானம். கணவன் -மனைவி உறவுநிலையையும்,தொட்டு தழுவிக்கொள்ளுவதால் உண்டாகும் சுகநிலையையும் குறிக்கும். ஜாதகத்தில் எட்டாமிடம் பாலின உறுப்புகளை பற்றியும் மற்றும் பாலினநோய்கள் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது. பனிரெண்டாமிடம் ஒருவரது படுக்கை சுகத்தை பற்றி இப்பாவகத்தின உதவியால் அறிந்துகொள்ள முடிகிறது.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை

செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை எந்த வீட்டில் இருந்தாலும் அது அவ்வளவாக சிறப்பு பலனைத் தராது. இந்த சேர்க்கை காரணமாக பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். செவ்வாய், சுக்கிரனுடன், ராகு, கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று சேர்ந்திருந்தால் அவர்களின் பாலியல் உணர்வுகள் வக்கிரமடையும். பாலியல் நோய்களுக்கும் அவர்கள் உள்ளாவதற்கு வாய்ப்புள்ளது. மேஷம், ரிஷபம் ஆகிய லக்னத்திற்கு இந்த சேர்க்கை பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கடகம், கன்னி, துலாம் ஆகிய லக்னத்தை உடையவர்களுக்கு இந்த சேர்க்கை அமைவது நல்லதல்ல என்கின்றனர் ஜோதிடர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Determine the positions of Venus and Mars by sign and learn the sexual secrets of your partner, and yourself!If you don’t know the positions of Venus and Mars.sex is best when it’s spontaneous and unrestricted. These people melt when their partner gives themselves to them innocently and purely.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more