For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020-23: சனியால் சந்தோஷம் - யாருக்கு சங்கடம் யாருக்கு

சனி பகவான் நியாயவான். அவருக்கு மேஷம் நீச வீடு துலாம் உச்ச வீடு. மகரம் கும்பம் ஆட்சி வீடுகள். சனி பகவான் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை. ஒருவரின் ஜாதகத்தில் சனி 3,6,10,11 போன்ற வீடுகளில் அமைவது நல்லது. சனிக்கு மேஷம் நீச வீடு துலாம் உச்ச வீடு. மகரம் கும்பம் ஆட்சி வீடுகள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் சனி இருப்பதனால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.

அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். மேஷம் விருச்சிகம், லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார் கடகம், சிம்மம் , தனுசு, மீனம் லக்னங்களுக்கு சனி சுமாரான பலன்களையே சனி திசை கொடுக்கும்.

சனி திசை 19 வருடங்கள். இந்த சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். இதே போல சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமத்திலும், தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.

சனிக்கு பிடித்தது

சனிக்கு பிடித்தது

சனி பகவான் நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம். சனி பகவானின் நிறம் கறுப்பு. அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு. சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம். அவருக்கு ஏற்ற தானியம் எள். சனிபகவானுக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி. அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம். ரத்தினம் இந்திர நீலம். அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம். பிடித்த மலர் கருங்குவளை.அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு. சனிக்கு வாகனம் காக்கை.

சனியின் நட்பு கிரகங்கள்

சனியின் நட்பு கிரகங்கள்

சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும்.

செவ்வாய் சனி பகை

செவ்வாய் சனி பகை

சனி இந்த ராசியில் நீசமடைகிறார். கூடவே இது செவ்வாயின் வீடு என்பதால் சனி இந்த ராசியில் அமர்ந்திருந்தால் இயற்கைக்கு எதிரான வேலைகளை செய்வார்களாம். நேர்மையற்றவர்களாக இருப்பார்களாம். விருச்சிகத்தில் சனி அமர்வதற்கு நல்ல இடம் அல்ல செவ்வாய் சனிக்கு எதிரி. பகையாளி வீட்டில் சனி அமர்வது நல்லதல்ல. அவசரக்காரர்கள். படபடப்பானவர்கள். சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் ஏற்படும்.

நன்மை செய்யும் சனி

நன்மை செய்யும் சனி

ரிஷபம், துலாம் சுக்கிரன் வீடு. ரிஷபத்தில் சனியிருக்க நன்மைகள் அதிகம்தான். சிலருக்கு அதிகாரம் கிடைக்கும். தந்திரமாக செயல்படுபவர். சிலர் கவலையோடு இருப்பார்கள். துலாம் சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன்.

புதன் வீட்டில் சனி

புதன் வீட்டில் சனி

மிதுனத்தில் சனியிருக்கப் பெற்றவர்கள் படபடப்பானவர்கள். இது புதன் வீடு. குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். இயந்திரங்கள் ரசாயன துறையில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். கன்னியில் சனி அமையப்பெற்றவர்கள் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள். அதிரடியானவர்கள். அதே நேரம் உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும்.

சூரியன் சந்திரன் வீட்டில் சனி

சூரியன் சந்திரன் வீட்டில் சனி

கடகம் சந்திரன் வீடு இங்கே சனி இருந்தால் சுயநலமானவர்களாவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிலரது வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். சிம்மத்தில் சனி இருந்தால் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். முரண்பாடு கொண்டவர்கள். சிலர் எழுத்து துறையில் சாதிப்பார்கள்.

ஆட்சி பெறும் சனி

ஆட்சி பெறும் சனி

மகரம், கும்பம் ராசிகள் சனியின் சொந்த வீடு, இந்த ராசிகளில் சனி இருக்கப் பெற்றவர்கள் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். சிலர் படிப்பாளிகள். கும்பம் ராசியில் சனி அமரப்பெற்றவர்கள். மகிழ்ச்சியானவர்கள். இவர்களின் வாழ்க்கையில் எந்த குறையுமே இருக்காது.

அதிர்ஷ்டசாலிகள்

அதிர்ஷ்டசாலிகள்

குருவின் வீடான தனுசு ராசியில் சனி அமர ஜாதகர் பெருந்தன்மையுடன் இருப்பார். புகழ் பெயர் கிடைக்கும். வயதான காலத்திலும் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மீனம் ராசியில் சனி அமர பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவராக இருப்பார்.

English summary
Shani or Saturn is the most dreaded graha in Hindu astrology. Astrologers believe that all the other planets fail to give any good results if Shani happens to cause obstruction.There are many legends, myths, fears and folklore associated with Shani. Shani's most powerful place in the chart is in the 7th house. He is a particularly beneficial planet for Taurus and Libra ascendants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X