For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களே... ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வரவேண்டாம் - நிர்வாகம்

பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சீரடி: ஆலயம் என்பது புனிதமான இடமாகும் அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Siradi Sai Baba Temple in fashionable attire dress code for devottess

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் மூடப்பட்ட கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைனில் புக் செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. ஷாட்ஸ், பெர்முடாஸ், டைட் பேண்ட், டி சர்ட், லெக்கின்ஸ் போன்றவைகளை அணிந்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Siradi Sai Baba Temple in fashionable attire dress code for devottess

இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் கோவிலுக்கு அநாகரிகமான உடையணிந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன. இது புனித மற்றும் தெய்வீக இடமாகும். எனவே நாகரிகமாகவோ அல்லது இந்திய கலாசார உடைகளை அணிந்து வருமாறு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று கோவில் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி கான்குராஜ் பாகதே தெரிவித்துள்ளார்.

English summary
The Sai Baba Temple in Shirdi reopened on November 16, 2020 after being closed for more than seven months, due to the coronavirus pandemic. According to the order, devotees will not be allowed to enter the temple premises in revealing or short clothes. Attires that won't be allowed inside the temple would include half pants, bermuda shorts, frocks, minis, etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X