For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் தாலி கயிறு - கொரோனா பற்றிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலை மக்களுக்கு உணர்த்தவே, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் கயிறையும் மஞ்சள் சரடையும் வைக்க உத்தரவிட்டு உணர்த்தியுள்ளார் என்று பக்தர்கள் மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இது வரையிலும், சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கியதோடு பத்தாயிரம் பேர்களை பலிவாங்கிவிட்டது. அதன் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, டாக்டர்கள் சொல்வது மஞ்சளை பயன்படுத்துங்கள் என்று தான். கொரோனா வைரஸ் தாக்குதலை மக்களுக்கு உணர்த்தவே, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் கயிறையும் மஞ்சள் சரடையும் வைக்க உத்தரவிட்டு உணர்த்தியுள்ளார் என்று பக்தர்கள் மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் நகருக்கு அருகில் உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த கோவில். இக்கோவிலின் பிரசித்திக்கு காரணம், இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டதான். இங்கு குடிகொண்டுள்ள சுப்ரமணிய சுவாமியே கடவுள் நம்பிக்கையுள்ள பக்தர்களின் கனவில் தோன்றி, ஏதாவது ஒரு பொருளை குறிப்பிட்டு பக்தருக்கு உணர்த்தி, தன்னுடைய சன்னதிக்கு முன்பாக உள்ள முன்மண்டபத் தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

சுப்ரமணிய சுவாமி உத்தரவின் படி, அந்த குறிப்பிட்ட பக்தர் தான், கோவில் நிர்வாகத்தை உடனடியாக அனுகி, கண்ட கனவை குறிப்பிட்டு சொல்வார். கோவில் நிர்வாகமும் சுவாமியின் முன்பாக பூ போட்டு பார்த்து வெள்ளை பூ வந்தால், அதையே சுவாமியின் உத்தரவாக மதித்து, பக்தரின் கனவில் வந்த பொருளையே முறைப்படி பூஜை செய்து உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

ஆண்டவர் உத்தரவு பெட்டி

ஆண்டவர் உத்தரவு பெட்டி

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. வேறு ஒரு பக்தரின் கனவில் வந்து வேறு ஒரு பொருளை வைக்குமாறு உத்தரவு வரும் வரை அந்த பொருளே உத்தரவுப் பெட்டியில் இருக்கும். உத்தரவு பெட்டியில் என்ன பொருள் உள்ளதோ, அந்த பொருளானது சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவே இருக்கலாம்.

துப்பாக்கி

துப்பாக்கி

கடந்த 1999ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துப்பாக்கி வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்றே நினைத்தனர். மக்கள் நினைத்த மாதிரியே, அந்த ஆண்டு மே மாதத்தில் கார்கில் போர் நடைபெற்றது. அதே போல் மண், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டது.

தண்ணீரும் சுனாமியும்

தண்ணீரும் சுனாமியும்

கடந்த 2004ம் ஆண்டு உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜையான போது சுனாமியும், 2011ம் ஆண்டு இதே போல் ஆற்று நீர் வைத்து பூஜையானபோது முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. 2017ம் ஆண்டு இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனால் சட்டத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா தண்டனை பெற்றார்.

மஞ்சள் தாலி கயிறு

மஞ்சள் தாலி கயிறு

அருகம்புல், மிளகு, கீழாநெல்லிவேர் நோட்டு வைத்து பூஜை செய்யப்பட்போது மழை அதிகம் பெய்தது. அம்பு வைத்து பூஜை செய்தபோது சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இவ்வாறு வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் தாலிக்கயிற்றில் மஞ்சள் சரடு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

சுப காரியங்கள் நடைபெறும்

சுப காரியங்கள் நடைபெறும்

இது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் வந்து சுப்ரமணிய சுவாமி உத்தரவிட்ட பொருள் ஆகும். மஞ்சள் தாலிக் கயிற்றில் மஞ்சள் சரடு வைத்து பூஜிக்கப்படுவதால், இந்த ஆண்டு அதிக அளவில் சுபகாரியங்கள் நடைபெறும் என்றே பக்தர்கள் அனைவரும் நம்பினர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த நிலையில், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இது வரையிலும், சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கியதோடு பத்தாயிரம் பேர்களை பலிவாங்கிவிட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து ஐந்து பேர்களை காவு வாங்கிவிட்டது. இருநூறு பேர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

மருத்துவர்கள் கூறும் ஆலோசனையில் முக்கியமாக இடம்பெறுவது, நம்முடைய உணவில் தவறாமல் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். இதனால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மஞ்சளையும், மஞ்சள் தூளையும் வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மஞ்சளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பழங்காலம் முதல் தமிழக மக்கள் உணவில் மஞ்சளை சேர்த்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு, மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மஞ்சளின் மகிமை

மஞ்சளின் மகிமை

இரு பற்றி சிவன்மலை கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் இது பற்றி கூறும்போது, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். அது சாதகமாவும் இருக்கும், சில சமயத்தில் பாதகமாகவும் இருக்கும். தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் பரவு மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதன் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள மஞ்சளை பயன்படுத்துங்கள் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மஞ்சள் கயிறு மகிமை

மஞ்சள் கயிறு மகிமை

சுப்ரமணியசாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறு மகத்துவம் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலை மக்களுக்கு உணர்த்தவே, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் கயிறையும் மஞ்சள் சரடையும் வைக்க உத்தரவிட்டு உணர்த்தியுள்ளார் என்று பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.

English summary
The coronavirus, which originated in China, has spread across the globe, hitting more than three million people and killing tens of thousands. To protect us from its onslaught, doctors say to use turmeric. Devotees claim that we feel that the Lord Subramaniya Swamy has ordered the turmeric rope and the turmeric string in the Andavar Utharavu Petti to make the people aware of the coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X