• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு போக தடையா? விநாயருக்கு சிதறுகாய் போடுங்க விமானத்தில் பறக்கலாம்

|

மதுரை: தேங்காய் சக்தி நிறைந்தது. இறைவழிபாட்டிற்கு ஏற்றது. நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது, இது சித்தர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகிணி , ஹஸ்தம், திருவோணம், நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது, அது உடைந்து சில்லுச்சில்லாகச் சிதறி ஓடும். அது போல விநாயகரின் அருளால் நம்மைப் பீடித்திருக்கும் தோஷங்களும், பாவங்களும், விக்னங்களும் வேதனைகளும் இந்தக் காய் உடைந்து சிதறுவது போல, நம்மை விட்டு சிதறி ஓடும். தடை நீங்கும் என்பது ஐதீகம்.

மூன்று கண் உள்ள தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

அத்திவரதரின் அழகிய சிரிப்பு... தரிசனம் கண்ட உடன் பறந்த களைப்பு - ஜோதிடரின் அனுபவம்

 சிதறு தேங்காய்

சிதறு தேங்காய்

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது . ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் .

முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப்படுகிறது.

 ராகு கேது தோஷம் நீங்கும்

ராகு கேது தோஷம் நீங்கும்

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில், முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் போடுவதன் மூலம் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும். வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.

சித்தர்கள் முறை

சித்தர்கள் முறை

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம், சூலநாசவேர், இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண், இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமி வரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும். இது சித்தர்கள் முறையாகும்.

பில்லி சூனியம் போக்கும் தேங்காய்

பில்லி சூனியம் போக்கும் தேங்காய்

முள்ளம் பன்றி முள், எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும். இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம் ,

திருஷ்டி கழியும்

திருஷ்டி கழியும்

அமாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும், அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும். வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.

தடை நீங்கும்

தடை நீங்கும்

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகிணி , ஹஸ்தம், திருவோணம், நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும். அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்.

 
 
 
English summary
Smash Coconuts praying to Ganesha to solve the problem. The smashing of coconuts emphasizes that only when you break your hard exteriors or ego can you realize the inner energy within. When it is done on the fourth waning Moon, Sankatahara Chathurthi, to the archetype Ganesha, it eliminates all obstacles and puts you on a path to achievement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X