• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரிய கிரகணத்தால் யாருக்கு தோஷம் - என்ன பரிகாரம் பண்ணணும் தெரியுமா

|
  தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது நெருப்பு வளைய சூரிய கிரகணம்

  சென்னை: 6 கிரஹ சேர்க்கையுடன் சூரிய கிரஹண நேரம் ஒன்றாக வருவதால் சக்தியான நேரம் இந்த நேரத்தில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதே நல்லது. கேதுவின் ஆதிக்கத்தில் உள்ள அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் தவிர கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். கிரகண நேரத்தில் முன்னோர்களையும் குல தெய்வத்தையும் வேண்டுங்கள் நினைத்தது நடக்கும். பாதிப்புகள் எதுவும் நடக்காது.

  சூரிய ஒளியை நிலவு முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். சில நேரங்களில் சூரியனை முழுமையாக சந்திரனால் மறைக்க முடியாமல் போகிறது. சூரியனின் மையப் பகுதியை மறைக்கும் சந்திரனால் விளிம்புப் பகுதியை மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது வளைய சூரியகிரகணம் ஏற்படுகிறது. இது கங்கண சூரிய கிரகணம் என்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது.

  Solar eclips 2019 Amavasya Remedies

  சூரிய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாகவே வீட்டில் சமைத்து வைத்த உணவு, தண்ணீர் போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் கிரகணத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகள் தோஷங்கள் நீங்கும்.

  6 கிரகங்களின் சேர்க்கை அப்போது நடப்பதால் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது. இது ஒரு சாதாரண நிகழ்வு. அடிக்கடி பல முறை இதுபோன்ற நிகழ்வு நடந்து வருகின்றது. இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, இறைவன் ஆசி கிடைக்கும்.

  எப்போதும் கிரகண காலத்தில் உணவின் மீதும், குடிக்கும் தண்ணீர், பயன்படுத்தும் நீரின் மீதும் தர்ப்பை புல் போட்டு வையுங்கள். ஏனெனில் இந்த தர்ப்பை புல் தீய கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை காக்கக் கூடியது. ஒரு சிறிய கலனில் நீர் வைத்து அதில் தர்ப்பை புல் போட்டு வையுங்கள். அதனை கிரகணம் முடிந்த பின்னர் உங்கள் வீட்டில் அல்லது அருகில் உள்ள மரத்திற்கு ஊற்றிவிடுங்கள். அது வேப்ப மரமாகவோ, எருக்கன் செடியாகவோ இருக்கலாம். இப்படி நீங்கள் வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்ததை இறைவன் அள்ளிக்கொடுப்பார். முடிந்த வரை கிரகண நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டாலே போதும்

  சூரிய கிரகணம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 07:05 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கிரகணம் 8 மணிக்கு பிடிக்கின்றதென்றால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே குளித்து தயாராகிவிடுங்கள். பின்னர் இந்த கிரகண நேரத்தில் நாம் என்ன நினைக்கின்றோமோ அதை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்.

  ஒரு நோட்டில் கிரகணம் முடியும் வரை ஜெய் ஸ்ரீ ராம் அல்லது, ராமா ராமா அல்லது ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள். ஏனென்றால் ராம நாமம் இருக்கும் இடத்தில் அனுமன் இருப்பார். அனுமன் இருக்கும் இடத்தில் நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அண்டாது.

  இந்த சூரிய கிரகணம் தோன்றுவதால் சில நட்சத்திரகாரர்களுக்கு தோஷங்கள் ஏற்படுகின்றன. தனுசு ராசியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது கேதுவின் ஆதிக்கம் கொண்ட மூல நட்சத்திரத்தில் ஏற்படுவதால் அதற்கு முன்னதாக உள்ள கேட்டை பின்னதாக பூராடம், கேதுவின் ஆதிக்கம் கொண்ட அசுவினி மற்றும் மகம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

  தனுசு ராசி என்பது குருவின் வீடு மூல நட்சரத்தில் கேது சாரத்தில் இருப்பதால் கிரகணத்தாலும் 6 கிரக சேர்க்கையாலும் மனித வாழ்வில் எந்த பாதிப்பும் இருக்காது. கிரகணம் முடிந்த உடன் கல் உப்பை ஒரு கை நிறைய எடுத்து வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். அருகில் உள்ள கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும்.

  விநாயக பெருமானை வணங்கவும் நன்மை உண்டாகும். கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்யவும்

   
   
   
  English summary
  A combination of Thursday and Amavasya is being formed during this eclipse happening in growth yoga and Mool Nakshatra. At the same time, there are 6 planets together in Sagittarius.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X