For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்க

சூரியனை மறைக்கும் நிலவு அதனால் ஏற்படும் நெருப்பு வளையம் கிரகணம் வானத்தில் ஒரு அதிசயத்தை நிகழ்த்த உள்ளது. இந்த அதிசயத்தை மிஸ் பண்ணாம பாருங்க அப்படி மிஸ் பண்ணிட்டா 21 வருடங்கள் காத்திருக்க வேண்டும். இந்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்'... எப்போது நிகழும் ?

    சென்னை: கேது கிரகஸ்த சூரிய கிரகணம் வரும் வியாழக்கிழமை டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்து. இந்த சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணம் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கப் போகிறது. வானில் சில நிமிடங்கள் மட்டுமே காட்சி அளிக்கும் இந்த அதிசய நிகழ்வை காண வானியல் ஆய்வாளர்கள் மட்டுமல்லது இந்திய மக்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு சூரிய கிரகணத்தை பார்க்காமல் மிஸ் செய்து விட்டால் அப்புறம் 21 ஆண்டுகள் அதாவது 2040 ஆண்டுதான் வளைய சூரிய கிரகணம் எனப்படும் அதிசயத்தை பார்க்க முடியும்.

    சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது.

    சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல ஒளி தெரிகிறபோது, அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வ நிகழ்வு ஆகும். இந்த வளைய சூரிய கிரகணம், வரும் 26ஆம் தேதி நிகழ்கிறது.

    சூரியனை மறைக்கும் நிலவு

    சூரியனை மறைக்கும் நிலவு

    பூமியை சுற்றும் சந்திரன், சூரியனை சுற்றும் பூமி என வானத்தில் சத்தமில்லாமல் சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் போது ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. அப்போது சூரியனை நிலவு மறைக்கிறது. அப்போது சந்திரனின் நிலவு பூமியின் மீது விழுகிறது. இதுவே கிரகணமாக தெரிகிறது. அந்த நிழல் பூமிப்பந்தில் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரி தெரிவதில்லை. ஒரு பகுதியில் இருப்பவர்களுக்கு முழுமையாக தெரியும் இன்னொரு பகுதியில் இருப்பவர்களுக்கு பகுதி சூரிய கிரகணமானத் தெரியும்.

    வளைய சூரிய கிரகணம்

    வளைய சூரிய கிரகணம்

    சூரிய ஒளியை நிலவு முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். சில நேரங்களில் சூரியனின் வட்டுப் பகுதியை சந்திரானால் முழுமையாக மறைக்க முடியாமல் போகிறது. சூரியனின் மையப் பகுதியை மறைக்கும் சந்திரனால் விளிம்புப் பகுதியை மறைக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது வளைய சூரியகிரகணம் ஏற்படுகிறது. இது கங்கண சூரிய கிரகணம் என்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது இதைத்தான் ring of fire என்கின்றனர்.

    கதிர்வீச்சு பாதிப்பு நீங்கும்

    கதிர்வீச்சு பாதிப்பு நீங்கும்

    சூரிய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாகவே வீட்டில் சமைத்து வைத்த உணவு, தண்ணீர் போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் கிரகணத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகள் தோஷங்கள் நீங்கும்.

    கேது நட்சத்திரகாரர்கள்

    கேது நட்சத்திரகாரர்கள்

    இந்த சூரிய கிரகணம் தோன்றுவதால் சில நட்சத்திரகாரர்களுக்கு தோஷங்கள் ஏற்படுகின்றன. தனுசு ராசியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது கேதுவின் ஆதிக்கம் கொண்ட மூல நட்சத்திரத்தில் ஏற்படுவதால் அதற்கு முன்னதாக உள்ள கேட்டை பின்னதாக பூராடம், கேதுவின் ஆதிக்கம் கொண்ட அசுவினி மற்றும் மகம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

    கல் உப்பு போட்டு குளிங்க

    கல் உப்பு போட்டு குளிங்க

    கிரகணம் முடிந்த உடன் கடலில் குளிக்கலாம் அப்படி அருகில் கடல் இல்லாதவர்கள் வீட்டில் கல் உப்பை ஒரு கை நிறைய எடுத்து வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். அருகில் உள்ள கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும்.

    English summary
    Surya Grahanam Pariharam.This Solar Eclipse will occur in Sagittarius and Mool Nakshatra during Paush Amavasya under the Vriddhi Yoga. Adverse effects will be seen on Brahmins and women.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X