For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம் வருது.. தம்பதிகளே.. "அதை" தவிர்க்கணுமாம்.. எச்சரிக்கும் ஜோதிடர்கள்!

தனுசு ராசியில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் 27 வரை 6 கிரகங்கள் இணைகின்றன. அதனால் என்ன பாதிப்பு என்று ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம். இன்று சூரிய கிரகணம் பற்றி பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்'... எப்போது நிகழும் ?

    மதுரை: கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது என ஒருபுறம் எச்சரித்தாலும் அந்த நாளில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகம் இருப்பதால் புதுமணத்தம்பதிகள் உறவில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். சூரிய கிரகணம் டிசம்பர் 26 இந்திய நேரப்படி காலை 8 மணி முதல் பிற்பகல் 1.35 வரை நீடிக்கிறது. இந்த சூரிய கிரகணம் விஷேசமானது கங்கண சூரிய கிரகணம் கூடவே தனுசு ராசியில் ஆறு கிரக கூட்டணி அதுதான் விஷேசம். அன்றைய தினம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது. கிரகணத்தினால் தோஷம் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நுழைவது சூரிய கிரகணம். இது பகுதி நேர கேது கிரகஸ்த சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். சூரியனை கேது மறைப்பது சூரிய கிரகணம். ராகு கேது என்னும் பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என புராண கதைகள் சொன்னாலும் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    சூரியன் ஒளி கடவுள் அனைவருக்கும் சக்தியை தருபவர். சூரியனின் ஒளி மறைக்கப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நிழல் மறைக்கப்படுகிறது. பகுதி சூரிய கிரகணம். கிரகணங்களில் பல வகை உள்ளன. முழு சூரிய கிரகணம், வளைய கதிரவன் மறைப்பு. நெருப்பு வளையம் போல சூரியன் வெளிப்படும். வளையம் போல இருக்கும் கிரகணம் சில நேரங்களில் கலப்பு சூரிய கிரகணம் தோன்றும். வளைய சூரிய கிரகணம் கங்கண கிரகணம் தீ ஜூவலையாக தெரியும்.

    அமைதி முக்கியம்

    அமைதி முக்கியம்

    டிசம்பர் 25 முதல் 27 வரை 6 கிரகங்கள் தனுசு ராசியில் இணைகின்றன. அதனால் என்ன பாதிப்பு என்று ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம். இன்று சூரிய கிரகணம் பற்றி பார்க்கலாம். பூமிக்கு சூரியன் கதிர் கிடைக்காது தடுக்கப்படும். கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் உணவு சக்தி ஜீரணமாகாது. நாம் சாப்பிடும் உணவு சக்தியாக மாற சூரியன் வேண்டும். கிரகணத்தின் போது சாப்பிட்டால் நெகடிவ் எனர்ஜி ஏற்படும். சூரிய கிரகணத்தின் போது வெளியே போகாதீங்க. பலம் தடுக்கப்படும். கதிர்வீச்சு வெளிப்படும் போது பயணம் செய்தால் கண்கள் பாதிப்பிற்கு ஆளாகும்.

    என்ன செய்யக்கூடாது

    என்ன செய்யக்கூடாது

    வேலைக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் சீக்கிரம் போங்க. கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம். காயம்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கிரகண நேரத்தில் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் வேகமாக போகாதீங்க. கிரகண நாளில் என்ன செய்யக்கூடாது என்றால் சுப காரிய பேச்சுக்கள் எதையும் எடுக்காதீங்க, சூரிய கிரகணநாளில் பேசினால் நிறைவேறாது. புதிய முயற்சிகள் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து எதையும் போடாதீங்க.

    அசைவம் வேண்டாம்

    அசைவம் வேண்டாம்

    கிரகண நேரத்தில் சமைக்காதீங்க. சாப்பிடாதீங்க. அசைவம் சாப்பிடவே சாப்பிடாதீங்க. உணவுப் பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வையுங்கள். தர்ப்பைக்கு ஆற்றலை சேமித்து வைக்கும் சக்தி உண்டு. கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து நம்மை காக்கும். பூஜை அறையில் தர்ப்பையை போட்டு முடி வையுங்கள். கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காதீங்க.

    கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

    கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

    கிரகணம் ஆரம்பிக்க 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுங்கள். கர்ப்பிணிகள் சூரிய கிரகண நாளில் வெளியே போகாதீங்க. சாப்பிடாதீங்க. தவிர்த்து விடுங்கள். சிறு குழந்தைகளுக்கு பாலுட்டும் தாய்மார்கள் யாரும் குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க. அப்படி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கறுப்பு துணியால் தலையில் முக்காடு போட்டுக்கொள்ளுங்கள்.

    தியானம் பண்ணுங்க

    தியானம் பண்ணுங்க

    தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தால் சூரிய காந்தி விதைகளை தண்ணீர் போட்டு குடிக்கலாம். இதயம் இயங்க சூரியன் சக்தி தேவை. பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரியுங்கள். சூரிய முத்திரை செய்யலாம். கிரகணம் முடிந்த உடன் கல் உப்பு போட்டு கை கால் கழுவுங்கள். அல்லது தலைக்கு குளிங்க தோஷம் நீங்கும். தியானம் செய்யுங்க. விளக்கேற்றி உங்களின் வேண்டுதலை செய்யுங்கள். உங்களின் குல தெய்வத்தை வேண்டுங்கள் நல்லதே நடக்கும். இறை மந்திரங்களை படியுங்கள், அநாவசிய பேச்சுக்கள் வேண்டாம்.

    சாப்பிட வேண்டாம்

    சாப்பிட வேண்டாம்

    பல நூற்றாண்டுகளாக ஜோதிடர்கள் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறோம். கிரகணம் பிடிக்கும் முன்பாக குளித்து விட்டு தியானம் செய்ய வேண்டும். நினைத்தது நிறைவேறும். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கர்ப்பிணிகள் வியாழக்கிழமை விடியற்காலை காலை 5 மணிக்கு சாப்பிட்டு விடுங்கள். கிரகண வேலையில் சாப்பிடாதீங்க. கர்ப்பிணி பெண்கள், அந்த 3 நாட்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வந்தால் பாதிப்பு அதிகமாகும்.

    டிசம்பர் 26ல் தம்பதிகள் எச்சரிக்கை

    டிசம்பர் 26ல் தம்பதிகள் எச்சரிக்கை

    கிரகண நாளில் புதுமண தம்பதிகள் யாரும் அன்றைக்கு உறவில் ஈடுபட வேண்டாம். அன்றைக்கு ஆறு கிரகங்கள் இணைவதால் எச்சரிக்கை அன்றைக்கு கரு தரிக்கும் போது அது பாதிப்பை ஏற்படுத்தும் கூடவே நரம்பு மண்டலம் பாதிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

    கேட்டது கொடுக்கும் கிரகணம்

    கேட்டது கொடுக்கும் கிரகணம்

    கிரகண நேரத்தில் பிராத்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும். அசுரர்கள், அரக்கர்கள் பலி கொடுப்பார்கள் அது தீய சக்தியை பெறும் வழி. மனிதர்களாகிய நாம் நமக்கு பிடித்த தெய்வத்திடம் நல்லதை கேட்போம். சூரிய கிரகணம் வரும் நாளில் அரசாள்பவர்களும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் சூரியனை மனதார வணங்குங்கள் நல்லதே நடக்கும். தேர்வில் ஜெயிக்க மாணவர்கள் பிரார்த்தனை செய்யலாம்.

    தோஷம் யாருக்கு

    தோஷம் யாருக்கு

    கிரகண தோஷம் மூலம் நட்சத்திரத்தில் வருகிறது. தனுசு ராசியில் கிரகணம் ஆறுகிரக சேர்க்கைகள் உள்ளது. கேட்டை, மூலம், பூராடம் தோஷமான நட்சத்திரங்கள். கேதுவை ஆதிக்கமாகக் கொண்ட அஸ்வினி, மகம் நட்சத்திர காரகர்கள் பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை பிறந்தவர்களும் ஆலய தரிசனம் அவசியம் செய்வது நல்லது வீடு வாசலை சுத்தம் செய்யுங்க நல்லதே நடக்கும்.

    English summary
    Read this information about the eclipses and remedies for the year 2019 Solar Eclipse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X