For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்

டிசம்பர் 25ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை சூரியன், சந்திரன், சனி, கேது, குரு, புதன் ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இணைந்திருக்கும் நாட்கள் ஒன்றும் மோசமான நாட்கள் இல்லை. அமாவாசை நாள், அனும

Google Oneindia Tamil News

சென்னை: இம்மாத இறுதியில் தனுசு ராசியில் கிரகங்கள் இணைவது நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமாக அமையும் கோள் சேர்க்கை. 1482-ம் வருடம் நிகழ்ந்த இது போன்ற கோள்சார அமைப்பு மிகப்பெரும் சாம்ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்தது. டிசம்பர் 25 முதல் 27 வரையிலான மூன்று நாள்கள் இந்த அமைப்பு இருக்கப்போகிறது எனசமீபத்தில் சமூக வலைதளங்களில் இப்படியொரு வாட்ஸ்அப் தகவல் வலம் வருகிறது. என்னதான் நடக்கும் அந்த நாட்களில் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது என்ன என்று பார்க்கலாம்.

1964 ம் வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்து போனது. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதும் இதுபோன்ற டிசம்பர் 26ஆம் தேதிதான். ஆனால் இந்த ஆண்டு கிரக சேர்க்கை நிகழ உள்ள இந்த மூன்று தினங்களுமே சுபதினங்களாக வருவதால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்பதே உண்மை. 66 சதவிகித பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. ஆனால், நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சென்னை, கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாகனங்களுக்கு மின்னல் பாதிப்பு ஏற்படும்.

தனுசு ராசியில் சூரியன், சந்திரன், குரு, கேது,புதன்,சனி ஆகிய கிரகங்கள் டிசம்பர் 25ஆம் தேதியன்று கூட்டணி சேருகின்றன. அதோடு அத்தனை கிரகங்களும் மிதுன ராசியில் உள்ள ராகுவை பார்க்கின்றன. ராகு பகவான் தனது சம சப்தம பார்வையாக இந்த ஆறு கிரகங்களையும் பார்வையிடுகிறார்.
ஒரு ராசியில் குருவும், கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்திருப்பதால் மடங்கள், அறக்கட்டளைகள் வைத்து நடத்தும் மடாதிபதிகளுக்குத் தொந்தரவுகள் ஏற்படும் என்பதுதான் உண்மை. பொதுமக்களுக்குப் பொருள் இழப்பு ஏற்படலாம். ஆனால், உயிரிழப்பு ஏற்படாது.

ஆறு கிரகங்கள் கூட்டணி

ஆறு கிரகங்கள் கூட்டணி

தனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கையால் எந்தவித மாற்றமும் பாதிப்பும் இருக்காது என்று அடித்துச் சொல்லலாம். குரு, கேது சேர்க்கை என்பது ஆன்மிகத்திலிருக்கும் மடாதிபதிகளுக்குப் பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். ஏற்கெனவே குரு மகாசந்நிதானம் அவர்கள் அமரராகிவிட்டார். நித்யானந்தா நாடு நாடாகச் சென்று அலைந்து கொண்டிருக்கிறார்.

ஜோதிட உண்மை

ஜோதிட உண்மை

சூரியனும் சந்திரனும் மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் நான்காம் பாதத்தில் இருக்கிறார்கள். கேது பகவான், பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்துக்கு வந்துவிடுகிறார். சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் மூலம் நட்சத்திர நான்காம் பாதத்தில் இருக்கிறார்கள். சந்திரன், பூராடம் முதல் பாதத்துக்கு வருகிறார். இந்த ஆறு கிரகக் கூட்டணியால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்பதே ஜோதிட ரீதியான உண்மை.

பீதி அடைய வேண்டாம்

பீதி அடைய வேண்டாம்

அடுத்த ஒரு மாதத்துக்குள் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் என்பதற்கோ பெருமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கோ எந்தவித அடிப்படை ஆதாரமும் சான்றுகளும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே ஆறு கிரக கூட்டணி பற்றி அச்சுறுத்தும் வாட்ஸ் அப் தகவல் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வானிலை ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர்.

பதற்றம் வேண்டாம்

பதற்றம் வேண்டாம்

ஆத்ம காரகன் சூரியன், மனோகாரகன் சந்திரன், ஞானகாரகன் கேது, ஆன்மீக காரகன் குரு, புத்தி காரகன் குரு, ஆயுள் காரகன் சனி என ஆறு கிரகங்கள் இணைந்து இருக்க ஒரு கிரக யுத்தமே நடக்கிறது. அதை ராகு பார்வையிடும் போது 12 ராசியினரும் ஒருவித பதற்றத்தோடு இருப்பார்கள், எனவேதான் அந்த மூன்று நாட்கள் வெளியில் எங்கும் போகாமல் மவுனமாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர் ஜோதிடர்கள். மறதி அதிகமாகும் பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம் என்றும் சொல்கின்றனர்.

கிரக சேர்க்கை சிறப்பு

கிரக சேர்க்கை சிறப்பு

டிசம்பர் 25ஆம் தேதியன்று அனுமன் ஜெயந்தி, அன்று அமாவாசை. அதே போல 26ஆம் தேதி சூரிய கிரகணம், 27ஆம் தேதியன்று வளர்பிறை சந்திரனை பார்ப்பது நல்லது விஷேசம். இதனால் கிரக சேர்க்கை, கிரக பார்வையால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மை குறையும். அந்த கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பை நாம் தடுத்துவிடலாம். அதற்கு இப்பொழுது இருந்தே நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பரிகாரம் பண்ணுங்க

இந்த பரிகாரம் பண்ணுங்க

பாலில் சிறிது ஏலக்காயும் குங்குமப்பூவும் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் குடித்து விட்டு படுக்க வேண்டும். இவை அனைத்தையும் இப்பொழுது இருந்தே செய்துவர இந்த மோசமான கிரகச் சேர்கையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஒரு தர்ப்பைப்புல்லை எடுத்து ஒரு தாமிர பாத்திரத்தில் போட்டு வைத்து அதில் நீர் ஊற்றி தினமும் குடிநீராகக் குடிக்கவேண்டும். இது அந்த சமயத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அறவே நீக்கிவிடும். இப்பொழுது இருந்தே சுண்டல் கடலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பலம் பெறும். இது உடம்பிற்கும் மனதிற்கும் மிகவும் நல்லது.

English summary
A solar eclipse is just like a regular new moon where the Moon passes between Earth and the Sun. However, a solar eclipse is more powerful because the Moon darkens the Sun. Solar Eclipse December 2019 is an annular solar eclipse so not all of the Sun will be darkened. In this type of partial eclipse, the apparent diameter of the Moon is smaller than the Sun’s, leaving a ring of light around the eclipsed Sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X