• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சோமவார பிரதோஷம்- இன்று சிவனை வணங்கினால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இன்று சோமவார பிரதோஷம். திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம்.

இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

பிரதோஷ காலம்

பிரதோஷ காலம்

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்


இன்று திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி
இந்த மூன்றும் ஒன்றாக வரும்
அபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்

இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

திருமண தடை நீங்கும்

திருமண தடை நீங்கும்

ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்.
போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

சிவனுக்கு விரதம்

சிவனுக்கு விரதம்

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.

வில்வ மாலை அர்ச்சனை

வில்வ மாலை அர்ச்சனை

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது.

சிவனுக்கு அபிஷேகம்

சிவனுக்கு அபிஷேகம்

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சோமவார பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு கறந்த பசும்பால் இளநீர், மற்றும் தயிர், சந்தனம், விபூதி போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடை பெற உள்ளது.

பிரதோஷ விரதம்

பிரதோஷ விரதம்

வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்திரி பீடத்தில் நந்தி பீடத்தின் மேல் சிவன் உள்ளதால் இருவருக்கும் ஏக காலத்தில் அபிஷேகம், அர்ச்சனை நடைபெறுகிறது. பிரதோஷ பூஜையை முன்னிட்டு 468 சித்தர்கள் சிவலிங்க ருபத்திற்க்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ நாளில் மரகதாம்பிகை சமேத மரகலிங்கேஸ்வரரை தரிசித்து பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

சிவனுக்கு அபிஷேம்

சிவனுக்கு அபிஷேம்

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

English summary
Pradosham literally means the removal of sins. These times are the windows of opportunity to remove karma or karmic energies that limit our potential in this current life. Monday is known to be time to worship Shiva, it is the day ruled by His consort, the Goddess Parvati who rules over the Moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X