For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு

திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர்.

Google Oneindia Tamil News

வேலூர்: சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர் இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் மும்மூர்த்திகளின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும். அமாவாசையை முன்னிட்டு காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை மிளகாய் வற்றல் யாகமும், நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் காருதி வருகிற 03.06.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சனீஸ்வர பகவானின் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு சனி பிரீதி ஹோமமும் பீடத்தில் உள்ள காலசக்கிரத்திற்கு சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகிறது.

Somvati amavasya 2019: Monday Somavathi amavasya special yagam

திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்ம விஷ்ணு சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும். ஆகவே இந்த புண்ணிய தினத்தில் காலையில் குளித்து முடித்து வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

பிரதட்சிணம் செய்யும்போது எண்ணிக்கை சரியாக அமைய ஒவ்வொரு சுற்றுக்கும் ஏதோ ஒரு பூவோ, பழமோ, கல்கண்டோ ஒரு பொருளை மரத்தினடியில் விடுவது வழக்கம். சுற்றுக்கள் முடிந்த பின் அந்த பொருளை அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு தந்துவிடலாம்.

குடும்பத்தில் சச்சரவு நீங்கவும், தாம்பத்திய உறவில் விரிசல் அகலவும், நல்ல வேலை கிடைக்கவும், திருஷ்டிகள் நீங்கவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் அமாவாசை மிளகாய் வற்றல் யாகம் நடைபெற உள்ளது.

சனி பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படும் வழிபாடே சனி ப்ரீதி ஹோமம் ஆகும். சனி என்பது கர்மாவை குறிக்கும் கிரகம் ஆகும். சனி ப்ரீதி ஹோமம் செய்வதின் மூலம் சனி பகவானின் ஆசிர்வாதங்களை பெற்று திருமணத்தடை, உத்யோகத்தடை, ஆரோக்யத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினை தடை, எதிர்மறைத் தாக்கங்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்களைப் பெறலாம். மேலும் சிறந்த பலன்களை அடையலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி: 04172 - 230033, செல் - 9443330203

English summary
Amavasya falling on Monday is known as Somvati Amavasya special yagam conduct at Sri Dhanvantri arokya peedam Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X