For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்

Google Oneindia Tamil News

வேலூர்: ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது. இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு நேரில் சென்றும், சிறப்பு வழிபாடுகள் செய்து வருகிறார். ஒரு சில இடங்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வருகிறார்.

ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர்.

Sorna Saneeswarar temple kumbabishekam

இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவக்கிரகங்களுடன் சேர்ந்திரிப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சன்னதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்ய உள்ளார்.

Sorna Saneeswarar temple kumbabishekam

வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு நேரில் சென்றும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்ற தன்வந்திரி குடும்பத்தினர்கள் மூலமாகவும் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வருகிறார்.

Sorna Saneeswarar temple kumbabishekam

இந்த சனி பகவான் யந்திரத்தை சொர்ண சனீஸ்வர பகவானின் ஆதார பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தன்வந்திரி க்ஷேத்திரத்தில் சொர்ண சனிஸ்வரன் அமையவுள்ளதால் இப்பீடத்திற்கு 27 நக்ஷத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்யும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பீடமாகவும் அமைய உள்ளது.

ஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும் ஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்

திவ்ய விஜய யாத்திரையில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் :

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாகவும், ஆகர்ஷணம் பொருந்தியதாகவும், வழிபடும் பக்தர்களுக்கு அவரவர்களின் பிரார்த்தனைகள் விரைவில் நடைபெற வேண்டியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களுக்கு திவ்ய விஜய யாத்திரை சென்ற 01.05.2019 முதல் மேற்கொண்டுள்ளார். இதில் கல்பட்டு 21 அடி யோக சனீஸ்வரர் ஆலயம், கோலியனூரில் வாலி பிரதிஷ்டை செய்த தெற்கு நோக்கிய சனீஸ்வர பகவான், மொரட்டாண்டி 27 அடி உயர சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம், திருகொள்ளிகாடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், திருக்கோடிகாவல், குத்தாலம் பாதாள சனீஸ்வரர் ஆலயம், திருநரையூர் மங்கள சனீஸ்வரர் ஆலயங்களை தரிசனம் செய்துள்ளார்.

காக வாகனம் பெற்றதும் சனி பகவான் சாப விமோசனம் பெற்றதும் திருமணத்திற்கு காரணமானதும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஸ்தலமாக விளங்கும் விளாங்குளம் ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் ஆலயம், எட்டியத்தளி சனீஸ்வரர் ஆலயம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம், சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம் மற்றும் சூர்யனார் கோயில், ஆலங்குடி, திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன், ஸ்ரீமூஷ்ணம் பூவராஹர் கோயில், கும்பகோணம் ஆதி வராஹர் கோயில், பிள்ளையார்பட்டி, பட்டுகோட்டை, ஐய்யாவாடி ப்ரத்யங்கிரா கோயில், கஞ்சனூர், திருலோக்கி, திருமங்கலகுடி, கதிராமங்கலம், மன்னார்குடி, வடமதுரை, பரிக்கல் போன்ற பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் விஜயம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

Sorna Saneeswarar temple kumbabishekam

தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இவரை வணங்குவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, மற்றும் சனி தசை, சனி புக்தி ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்கவும், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் தீரவும், திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு பலன் பெறலாம்.

English summary
The maha kumbabishekam for Sri Sorna Saneeswara Temple on the Dhanvantri Temple will be performed on June 14, between 7.30 a.m. and 9.00 a.m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X