For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பருவமழை: வருணபகவானின் கருணையால் தமிழகம் செழிக்கும் - பஞ்சாங்கம் கணிப்பு

மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி உள்ள மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நடப்பாண்டு பருவமழை நன்றாக பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் என விளம்பி வருட பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவமழைக் காலமாகும். பருவமழை நடப்பாண்டு துவங்கி பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

    மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் தென் மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.

    பருவமழை எப்படி?

    பருவமழை எப்படி?

    வானிலை ஆய்வாளர்கள் மழையை பற்றி கணித்து மக்களுக்கு கூறி வரும் நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படியிருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 1500 மிமீ மழைகூட பெய்யலாம் இது 150.சென்டிமீட்டராகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று பஞ்சாங்கமும் கணித்துள்ளது.

    தென்மேற்கில் புயல்

    தென்மேற்கில் புயல்

    வைகாசி முடிந்து ஆனி பிறக்கப் போகிறது. ஆனி மாதம் அதாவது ஜூன் மாதத்தில் தென்மேற்கில் புயல் சின்னம் ஏற்படும். வட மாநிலங்களில் பெருமழை பொழிந்து வெள்ளம் ஏற்படும் என விளம்பி வருட பஞ்சாங்கம் கணித்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி யாத்ரீகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் எனவும் கணித்துள்ளது

    கடலில் புயல் சின்னம்

    கடலில் புயல் சின்னம்

    ஆடி மாதம் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகும் மழை குறையும். சூரிய கிரகணத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். பெரு வெள்ளம் கூடவே தீ விபத்தும் ஏற்படும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. காய்கறிகள் பழங்கள் விலைவாசி குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆவணியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் திடீர் திருமணங்கள் நிகழும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    புரட்டாசியில் புரட்டி எடுக்கும்

    புரட்டாசியில் புரட்டி எடுக்கும்

    தமிழகத்தில் புரட்டாசி மாதம் அதாவது செப்டம்பர் அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்யும் என்றும் விளைச்சல் அதிகரித்து விலைவாசி குறையும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சென்னை, குமரி வெள்ளம்

    சென்னை, குமரி வெள்ளம்

    கடந்த 2015 ஆண்டு சென்னை பெருவெள்ளம், வர்தா புயலை பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. அதே போல நெல்லை, குமரியை சூறையாடிய ஓகி புயலை பஞ்சாங்கம் கணித்திருந்தது. அதே போல நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழையை பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    English summary
    However, they will continue till October.Bay of Bengal can send 2 cyclones this year. Most roads and railway tracks will be damaged due to rains. 2018 Winter will start earlier than anticipated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X