For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலைமதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்ப

Google Oneindia Tamil News

வேலூர்:சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள். அத்தகைய பால திரிபுரசுந்தரிக்கு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தனி விக்ரகம் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

வாலாஜாபேட்டை அனந்தலைமதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹாகும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜையுடன் நடைபெற உள்ளது.

Sri Bala Tripura Sundari Karikkola Bhavani

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன

மேலும் சில சூபி ஞானியாரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன. புனித மறைகளும்,சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே

கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம். அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது

பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

Sri Bala Tripura Sundari Karikkola Bhavani

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி. மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி. ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம். எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்களின் தலைவன் முருக பெருமானை வணங்கி

வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து

முக்தியடைய முடியும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் மூல விக்கிரகம் 3.5 அடி உயரத்தில் 1.5 அடி அகலத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்குடத்தில் திரு. லோகநாத ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 17.10.2019 வியாழக்கிழமை முதல் கரிக்கோல பவனியாக மகாபலிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

கேளம்பக்கம், தரமணி, வேள்ச்சேரி, தாம்பரம், நெமிலி பாலா பீடம் வழியாக வாலாஜாபேட்டைக்கு வருகை புரிந்து நேற்று 18.10.2019 வெள்ளிக்கிழமை வாலாஜா பஸ் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வந்து சேர்ந்ததுள்ளது.

Sri Bala Tripura Sundari Karikkola Bhavani

சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை பக்தர்கள் அனைவரும் தரிசித்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Sri bala tripura sundari Temple maha kumbabisekam on November 3rd, 2019. On that day 1008 Sumangali pooja and 59 Couple Pooja celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X