For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தன்வந்திரி பீடத்தில் நோய் தீர்க்கும் தைலபிரசாதம்.. அமாவாசை சூலினி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷேகம் நடைபெற உள்ளது. அமாவாசை தினத்தில் சூலினி துர்க்கா ஹோமம் நடைபெற உள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 13.03.2018 செவ்வாய்கிழமை ஏகாதசி திதி மற்றும் 14.03.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற உள்ளன.

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான்.

விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

மாபெருடம் ஹோமம்

மாபெருடம் ஹோமம்

திருவோண திருநாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

ஆரோக்கியம் தரும் பிரசாதம்

ஆரோக்கியம் தரும் பிரசாதம்

திருவோண ஹோமத்தில், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம்.

சாப நிவர்த்தி பூஜை

சாப நிவர்த்தி பூஜை

பூர்வ ஜென்ம வினைகள் அகலவும், பிராமண சாபம் நீங்கவும், பெண் சாபம் மறையவும் மேலும் சிறப்பான பலன்கள் பெற வருகிற 14.03.2018 மற்றும் 29.03.2018 ஆகிய நாட்களில் பிரதோஷ ஹோமமும், பிரதோஷ பூஜையும், சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பசும்பால் கொண்டு மரகதேஸ்வரருக்கு அபிஷேகமும், வில்வ இலை, சங்குப்பூ கொண்டு சிறப்பு சிவநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

அமாவாசை பூஜை

அமாவாசை பூஜை

17.03.2018 சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது. அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

செய்வினை கோளாறுகள்

செய்வினை கோளாறுகள்

ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் இந்த யாகம் செய்யலாம்.

மழைவளம் பெருகும்

மழைவளம் பெருகும்

மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172-230033 / 09443330203

English summary
Sri Danvantri Arogya Peedam is dedicated to do social services, charity and also religion related activity. We will be able to do more to the society, if you are interested to support. Parikaaram can be made for all all doshems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X