• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கொரோனா நோய் பயங்கள் விலக மன அழுத்தம் நீங்க சிறப்பு மகா சுதர்ஸன தன்வந்திரி ஹோமம்

|

வேலூர்: உலகில் கொரோனா! ஊரில் கொரோனா என்று எங்கு பார்த்தாலும் கொரோனாவின் கோர தாண்டவம் யாரையும் விட்டுவைக்கவில்லை என்பதே நிதர்சனம். கொரோனாவினால் ஏற்படும் பயங்கள் நோய்கள் விலக சிறப்பு மகா சுதர்ஸன தன்வந்திரி ஹோமம் 17.05.2021 முதல் 24.05.2021 வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கியபீடத்தில் நடைபெறுகிறது

பெற்றோர்கள் இல்லாமல் பிள்ளைகள், பிள்ளைகள் இல்லாமல் பெற்றோர்கள். உற்றோர், உறவினர்களுக்கு கொடிய நோய்கள், உதவிக்கு அழைக்க முடியவில்லை, கடனோ பெருகுகிறது, கஷ்டமோ அதிகம், கடமையாற்ற முடியவில்லை, பொருளாதாரத்தின் இன்றைய நிலை சொல்லும் அளவுக்கு இல்லை, வேலை இல்லை, தொழில் இல்லை, வியாபாரம் இல்லை.

மருத்துவர்களின் மனித நேயம், செவிலியர்களின் அதி தீரசெயல், உறங்கா காவலர்கள் உதவி புரியும் உயர் அதிகாரிகள் என பலரும் பலவகைகளில் உதவிகள் புரிந்தாலும் உறவினர்கள் யாரும் இல்லை என்பது பாதிக்கப்பட்டோர்களின் வருத்தம். இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் இன்று இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா எனும் கொடிய நோய் தொற்றுதான். இந்த ஒரு நோய் இன்று உலகையே அச்சுறுத்தி வருவதால் மக்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா என்று நாட்டை விட்டு அகலும் என்பதே நம் ஒவ்வொருவருக்கும் உள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.

Sri Dhanvantri Arokya peedam Maha Sudarsana homam for removal of Corona

கொரோனா நோயினால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் மன அழுத்தம் நீங்கவும். பயங்கள் அகலவும். நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமாகவும். கொரோனா எனும் கொடிய அரக்கன் நாட்டை விட்டு அகலவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் சகஜ நிலைமைக்கு வரவும் மீண்டும் இத்தகைய நோய் வராமல் இருக்கவும் காக்கும் கடவுளும், நோய் தீர்க்கும் பெருமாளும் மருத்துவத்தின் தந்தையான ஸ்ரீ தன்வந்த்ரி பெருமாளை வேண்டி கொடிய தீர்க்கும் மூலிகைகள், ராஜ மூலிகைகள் கொண்டு காலனை விரட்டும் கடுக்காய் ஹோமமும். மஹா சுதர்சன தன்வந்த்ரி ஹோமம் வருகிற 17.05.2021 திங்கள் கிழமை முதல் 24.05.2021 திங்கள் கிழமை வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

கஷ்டங்கள் நீங்க எட்டு எழுத்து பெருமாளை வேண்டி 80 வகையான மூலிகைகள் கொண்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பயத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் மனநிலை மாறவும் நம்பிக்கையுடன் தளராத மனவலிமை பெறவும் 80க்கும் மேற்ப்பட்ட சன்னதிகள் கொண்டு தினமும் ஹோமங்கள் பூஜைகள், யாகங்கள் உலக மக்கள் நலன் வேண்டியும் பயங்கள் அகலவும் மனநம்பிக்கை பெறுகவும் தன்னலம்மற்ற எண்ணங்கள் பெருகவும் மக்கள் உயிர்ப்புடன் வாழவும் மேற்கண்ட யாகங்கள் நோய் தீர்க்கும் ஹோமங்களாக நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தின் சிறப்பு

கல்விக்காக ஒரு கடவுள், செல்வத்தை வழங்க ஒரு கடவுள், குழந்தை வரம் அருளும் ஒரு தெய்வம், திருமணத்தை நடத்தி வைக்க ஒரு தெய்வம், வழக்குகளை தீர்த்து வைக்க ஒரு தெய்வம், கடன் பிரச்சனைகளை தீர்க்க ஒரு கடவுள் என்று மனித குலத்தின் பல்வேறுவிதமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க நம்முடைய தெய்வங்கள் ஆலயங்களில் அமர்ந்து அருளாட்சி செய்யும் பொழுது ஆரோக்கியமான வாழ்க்கையை நமக்கு வழங்குவதற்காக ஒரு தெய்வம் ஶ்ரீதன்வந்திரி பகவான் என்ற பெயரிலே ஸ்ரீமன் நாராயணன் என்ற மகா விஷ்ணுவின் அவதாரமாக வேலூர் அருகில் வாலாஜாபேட்டை அனந்தலை கிராமத்தில் ஆரோக்கிய பீடத்தில் திருக்கோவில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆரோக்கியமான ஐஸ்வர்யமான ஆனந்தமான வாழ்வை வழங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு, இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீரிய முயற்சிகள் அமைந்த தனிச் சிறப்பு மிக்க ஆலயம் தான் ஸ்ரீ தன்வந்திரி பீடமாகும். இங்கு 80க்கும் மேற்பட்ட சன்னிதிகள்,நலம் தரும் மூலிகை ஹோமங்கள், கவலைகள் தீர்த்திடும் கடவுள் விக்கிரகங்கள், தூய்மையான பரந்த இடம் என பக்தர்களின் மனதை மகிழவைத்து வரவேற்கிறது இந்த பீடம்.

சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மத கடவுள்களை போற்றும் விதத்தில், இந்த ஆலயத்தில் ஆறு மத கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மூலவரான தன்வந்திரி பகவான் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல்கொடி ஏந்தியபடி பத்மபீடத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவியாக வீற்றிருப்பவர், மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கிய லட்சுமி தாயார். இவரும் தன்வந்திரி பெருமாளைப் போலவே, அமிர்த கலசமும், சீந்தல்கொடியும் கைகளில் ஏந்தியிருக்கிறார். இந்த அன்னைக்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால், ஆரோக்கிய தோஷங்கள் நீங்குவதுடன், ஆனந்தமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கொரோனா எனும் கொடிய நோயை அழிக்க நடைபெறும் யாகங்களில் பங்கேற்று பயத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் மனநிலை மாறி நன்மைகள் ஏற்பட பிராத்திப்போம். தொடர்புக்கு 94433 30203.

English summary
Sri Danvantri Arogya Peedam Sacred Center of Indian Culture. This is not a temple, but a Universal Peedam. This Center is common to all religions, to remove the sufferings of mankind and inspire them to share compassion and love with their fellow human beings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X