For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மக்கள் நலம் பெற ஹோமம் - கூட்டு பிரார்த்தனை

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள கேரள மாநில மக்கள் நலன் கருதி ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: கேரள மாநில மக்களின் நலன் கருதி சிறப்பு ஹோமங்கள் - கூட்டு பிரார்த்தனை வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள கேரள மாநில மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று நடத்தும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

Sri Dhanvantri arokya peedam performing Karthaveeryarjuna Homam for Kerala people

பரசுராமரை எதிர்த்து போரிட்டவரும், தத்தாத்ரேயரின் பரம சீடரும், ராவணனை விட மேலான பராக்ரமம் கொண்டவரும், விஷ்ணு தவிர பிறரால் அழியா வரம் பெற்றவரும், அனைத்துலகங்களையும் ஆளும் வரம் பெற்றவரும், 85,000 ஆண்டுகள் ஹைஹேயப் பேரரசின் சக்கரவர்த்தியாக பூவுலகை ஆட்சி செய்தவரும், ஆயிரம் கைகள் கொண்டவரும், ஸ்ரீ சுதர்சனர் அம்சமானவரும், சஹஸ்ரார்ஜுனர் என்றும், இழந்த பொருளை மீட்கும் பெருமாள் என்றும், ஆயிரவல்லி என்றும், க்ஷத்ரீயர்களின் ராஜா என்றும், தொலைந்த பொருட்கள் திரும்ப தரும் கடவுள் என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனி ஆலயம் அமைத்துள்ளார்.

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் பச்சை கல்லினால் 4அடி உயரத்தில் பாதரக்ஷை, சுதர்சன சக்கிரம், கதை, போர் வாள், சங்கு மற்றும் சக்கிரத்துடன் துடிப்புள்ள மீசையுடன் காவல் தெய்வமாகவும் மஹாராஜாவாகவும் அர்ஜுனராகவும் நின்ற கோலத்தில் 16 திருக்கரங்களுடன் வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்து வருகிறார்.

தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான இவருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் இழந்த பொருட்களை திரும்ப கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப் பட்ட கேரள மாநில மக்கள் துயரத்திலிருந்து விலகவும், இயற்கையின் சீற்றம் குறையவும், நோய்கள் வராமல் இருக்கவும், நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபடவும், மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், இழந்தவைகளை பெறவும் தேவைகள் பூர்த்தி அடையவும், சுகாதாரம், தூய்மை, இயற்கை வளம் மற்றும் செல்வ செழிப்பு பெற்று நலமுடன் வாழ தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான கார்த்தவீர்யார்ஜுனரை வேண்டியும் மனநோய் உடல் நோய் தீர்க்கும் பெருமாளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டியும் சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும், விசேஷ பூஜைகளும், கூட்டு பிரார்த்தனையும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.08.2018 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தின் மூலம் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம். நிலம், பூமி, வீடு திரும்ப கிடைக்கும். வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வரும். முன்னோர்கள் சாபங்கள், தோஷங்கள் விலகும். பழைய பெயர், புகழ், மரியாதை மீண்டும் கிடைக்கும். மூதாதையர் நியாயமான முறையில் சம்பாதித்து கொடுத்த சொத்துக்களும் செல்வங்களும் திரும்ப பெறலாம். இழந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்க பெறும். வரா கடன் வசூலாகும். கல்வியில் கவனம் கூடும்.

English summary
Kerala people affected flood.They lost their lives. Get back all that they have lost Turn to Karthaveeryarjuna to get them back into their life. Number of devotees have gained the following benefits from this Pooja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X