For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானின் அண்ணன் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம்

:திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திருமலை சீனிவாச பெருமாளின் அண்ணனாக பக்தர்களால் கொண்டாடப்படும் திருப்பதியில் அருள்பாலிக்கும் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் லாக் டவுன் நீடிப்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

திருப்பதி நகரின் மையப்பகுதி யில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் உள்ள இக்கோயிலின் திருமலையில் நடைபெறுவது போலவே பிரம்மோற்சவம் தெப்ப உற்சவம் நடைபெறும். உடையவர் என்றழைக்கப்படும் ராமாநுஜர் திருப்பதியில் தங்கியிருந்தபோது, திருவரங்கம் போன்றே இருக்கும் வகையில் இந்தக் கோயிலை ஸ்தாபித்தார். இந்த கோவிலில் ராமனுஜர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளை பெரிய அண்ணா', என்றும் பெத்த பெருமாள்' என்றும் அழைப்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரவு-செலவுகள் யாவும் இவரின் மேற்பார்வையில் நடப்பதாக ஐதிகம். இங்கு வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு ஆலய தரிசனமும் தடைபட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடியுள்ளது. உள்ளூர்வாசிகள் கூட கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை ஆலய நிர்வாகிகள் மட்டுமே கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஜாதகத்தில் லட்சுமியின் அருளும் சுக்கிரனின் அருளும் இருந்தால் நீங்க கோடீஸ்வரர்தான்ஜாதகத்தில் லட்சுமியின் அருளும் சுக்கிரனின் அருளும் இருந்தால் நீங்க கோடீஸ்வரர்தான்

ஏழுமலையானின் அண்ணன்

ஏழுமலையானின் அண்ணன்

திருமலையில் வாசம் செய்யும் ஏழுமலையானை தரிசிக்கும் முன்பாக கோவிந்தராஜ பெருமாளையும், அலர்மேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் மரபு. மலைமேல் ஏறி வராக தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு அங்கு வராக மூர்த்தியை தரிசனம் செய்து விட்டுதான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்.

தாயார் தரிசனம்

தாயார் தரிசனம்

திருப்பதி கோவிந்தராஜ பெருமாளை ஏன் முதலில் தரிசிக்க வேண்டும் என்று கேட்கலாம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோவில் கொண்டிருக்கும் கோவிந்தராஜர்தான் இவர் என்கிறது தல புராணம். சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் கோவிந்தராஜர். இந்த ஆலயத்திற்குள் அன்னை மகாலட்சுமி தேவியார் புண்டரீக வல்லித்தாயாராக அருள்பாலிக்கிறார். அன்னையின் கருணைப்பார்வை கிடைத்தாலே போதும் நமக்கும் ஏழுமலையானின் அருள் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை.

ஏழுமலையானின் வருமானம்

ஏழுமலையானின் வருமானம்

இந்த கோவிந்தராஜ பெருமாள் கோவில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்து. ஏழுமலையான் எழுந்தருளுவதற்கு முன்பாகவே திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டு விட்டதால் இவர் ஏழுமலையானின் அண்ணன். இந்த அண்ணனிடம் தனது கோவில் வருமான கணக்குகளை காண்பிப்பாராம் பெருமாள். பணம், நகை, பக்தர்களின் காணிக்கைகளை கணக்கு பார்ப்பாராம் கோவிந்தராஜ பெருமாள்.

பாம ருக்மணி சமோத பெருமாள்

பாம ருக்மணி சமோத பெருமாள்

இதே ஆலயத்திலேயே சத்யபாமா ருக்மணி சமேத பார்த்தசாரதி பெருமாளையும் தரிசனம் செய்யலாம். கோவிலின் வலது பக்கத்தில் ஆண்டாள் நாச்சியார் செங்கழுநீர் புஷ்பத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தை காண முடியவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கத்தான் செய்யும் இந்த முறை பெருமாளை மனதார நினைத்து வழிபடுங்கள் கோவிந்தராஜ பெருமாளின் அருள் வீடு தேடி வரும்.

English summary
Sri Govindaraja Swamy Temple Brahmotsavam begins on may 28th, 2020. The ancient temple Sri Govindaraja Swamy Temple is located in tirupati, Chittoor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X