For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியான நேற்று ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பங்கேற்பு இன்றி இந்த விழா நடைபெற்றது.

Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நன்னாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அவரது அவதார தினம் ஸ்ரீ ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு விட்டது என்றாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

அங்கு முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 3 மணிமுதல்

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

மாலை 3.30 வரை அலங்காரம் அமுது கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி வரை பொதுஜனசேவை

வசந்தகுமாரிடம் நான் பேசிய போது பயமோ... பதற்றமோ இல்லை... நினைவுகளை பகிர்ந்த மு.க.ஸ்டாலின்வசந்தகுமாரிடம் நான் பேசிய போது பயமோ... பதற்றமோ இல்லை... நினைவுகளை பகிர்ந்த மு.க.ஸ்டாலின்

நடைபெற்றது. அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார் நம்பெருமாள்.

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்கிறார்.

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணியளவில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். பக்தர்கள் அனுமதியின்றி உறியடி உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெறுவதால் மாலை 5.30 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது.

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

ஸ்ரீஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீகனகவள்ளி தாயார் சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஸ்ரீஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திவ்ய சேவை நடைபெற்றது.

Sri Jayanthi on Srirangam Ranganathar Temple

ராஜமன்னார்குடி திருவாரூர் ஸ்ரீசெங்கமலதாயார் சமேத ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

English summary
In the month of Avani, on Ashtami Tithi, Lord Krishna appeared on the auspicious day with the star Rohini. His Incarnation Day is celebrated annually as Sri Jayanti. Although Krishna Jayanti is celebrated in the month of August this year, Sri Jayanti is celebrated in the month of Avani at the Srirangam Ranganathar Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X