For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆறு ஹோமங்கள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஹயக்ரீவர் ரக்ஷையுடன் 6 ஹோமங்கள் நடைபெற உள்ளது. ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம

Google Oneindia Tamil News

இராணிப்பேட்டை: தேர்வு நேரம் நெருங்கி விட்டது. மாணவ, மாணவிகளுக்கு கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, வைராக்யம் ஏற்படவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்வில் வெற்றி பெறவும், ஞாபக சக்தி கூடவும், தேர்வு பயம் நீங்கவும், உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும், மந்த நிலை விலகவும், ஞாபக மறதி நீங்கவும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஹயக்ரீவர் ரக்ஷையுடன் 6 ஹோமங்கள் வருகிற 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இந்த ஹோமங்கள் நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஏலக்காய், வெண்கடுகு, வெண்பட்டு, நாயுருவி, நவதானியங்கள், சீந்தில்கொடி, நெய், தேன், தாமரைபூ, நெல்பொரி போன்ற பல்வேறு பொருட்கள் கொண்டு ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் ஆறு ஹோமங்கள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஹயக்ரீவர் ரக்ஷைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஹோம பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

Sri Lakshmi Hayagreeva Homam at Danvantri Peedam

திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா.. உதயநிதியா .. பரபரப்பைக் கிளப்பும் ஜோதிடர்கள்!திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா.. உதயநிதியா .. பரபரப்பைக் கிளப்பும் ஜோதிடர்கள்!

இதனை தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிருதம், இளநீர், கரும்பு சாறு போன்ற 9 வகையான திரவியங்களை கொண்டு நவ கலச திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, வைராக்யம் ஏற்படவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்வில் வெற்றி பெறவும், ஞாபக சக்தி கூடவும், தேர்வு பயம் நீங்கவும், உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும், மந்த நிலை விலகவும், ஞாபக மறதி நீங்கவும், ஆயகலைகளில் ஆர்வம் கூடவும், குரு பக்தி ஏற்படவும், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நல்லுறவு ஏற்படவும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லிணக்கம், நன்மதிப்பு ஏற்படவும் மேலும் பலவேறு நன்மைகள் பெறவும் மேற்கண்ட ஆறு ஹோமங்கள் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்வாமிகள் இலவச எழுது பொருட்கள் அளித்து அருளாசி வழங்க உள்ளார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632513, இராணிப்பேட்டை மாவட்டம். 04172 230033 / 230274, 9443330203.

English summary
Hayagriva is worshipped as the God of knowledge and wisdom, with a human body and a horse head, brilliant white in color, with white garments and seated on a white lotus. A special Lakshmi Hayagriva homam would be performed at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on March 8,2020, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X