For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிழ்ச்சியா இருங்க... மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள்- ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்

செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு தமிழகத்தில் பல ஆலயங்களில் சன்னிதி உண்டு. சில சிறப்பான தனிப்பட்ட ஆலயங்களும் உண்டு ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னிதியில் செல்வ வளம் தரும் லட்சுமி குப

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது பழமொழி. சிரிக்க சிரிக்க செல்வம் பெருகும் என்கிறார் குபேரர். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வீட்டிற்குள் வருகிறாள். வெள்ளிக்கிழமையான இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி குபேரரை வணங்குவோம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும்.

சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.

ஸ்ரீ லட்சுமி குபேரன்

ஸ்ரீ லட்சுமி குபேரன்

வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

குபேர பூஜை

குபேர பூஜை

குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்றார். அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

குபேரன் செல்வம்

குபேரன் செல்வம்

சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

குபேரன் ஆட்சி

குபேரன் ஆட்சி

குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

செல்வம் தரும் குபேரன்

செல்வம் தரும் குபேரன்

இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

செல்வம் குவியும்

செல்வம் குவியும்

வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து லட்சுமி வருவதில்லை சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.

ஆரோக்கிய பீடம்

ஆரோக்கிய பீடம்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி குபேரனை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு ஆண்டு தோறும் அட்சய திதியை தினத்தில் லட்சுமி குபேர யாகம்,மகாலட்சுமி யாகத்துடன் பிரார்த்தனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை, பூசம் நட்சத்திரம் உள்ள நாட்களில் லட்சுமி குபேர யாகம் நடைபெறுகிறது. செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்யலாம்.

நோய் நொடிகள் தீரும்

நோய் நொடிகள் தீரும்

இந்த ஆலயத்தில் நோய் நொடி தீர்க்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள் அருளாசியுடன்
சொர்ண கணபதி யாகம்,லக்ஷ்மி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம்,லக்ஷ்மி குபேர ஹோமம்,சுக்கிர கிரஹ ஷாந்தி ஹோமம்,அஷ்ட லக்ஷ்மி யாகம், மஹாலக்ஷ்மி யாகம், பஞ்சசூக்த ஹோமம், லக்ஷ்மி வராக ஹோமம், சோடச லக்ஷ்மி யாகம் என பல யாகங்களும், ஹோமங்களும் செய்யப்படுகிறது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை.632513. 94433 30203.

English summary
Kubera as the God of wealth and material had the responsibility to distribute them while wealth creation was in the hands of Goddess Lakshmi. Kubera is mostly painted with his family and seen showering gold coins and navaratnas. Sri Lakshi Kuberar temple at Sri Dhanvantripeedam Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X