For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சுமி வராஹருக்கு கும்பாபிஷேகம் - வீடு, மனை பூமி பிரச்சினை தீர வணங்குங்கள்

வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் எழுந்தருளும் லட்சுமி வராஹரை வணங்கலாம்.

Google Oneindia Tamil News

வேலூர்: லட்சுமி வராக ஸ்வாமிக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைக்கூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும், பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர்.

sri lakshmi varahar temple Kumbabisekham

வராகம் என்றால் பன்றி என்று பொருள். மகாவிஷ்ணு பன்றி முகத்தோடு, தன் இடது தொடையில் செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவியை அமர்த்திக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தீயவர்களை ஒடுக்கி நல்லவர்களைப் பாதுகாத்து, தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம்தான் வராக அவதாரம்.

ஹிரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, அவன் புரிகிற போரில் எவரும் தன்னை வெற்றி கொள்ளக் கூடாது என்று ஒரு வரம் பெற்றான். அதன் விளைவாக எல்லோரையும் வம்புக்கு இழுத்தான். தேவருலகம் சென்று தேவர்களை முறியடித்தான். வருண பகவானிடம் சண்டையிட்டு, சமுத்திரத்தைக் கைப்பற்றினான். பிறகு, பூமி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, சமுத்திரத்துக்கு அடியில் பூமியைக் கொண்டு போய் மறைத்து வைத்தான்.

அசுரனால் பாதிக்கப்பட்டவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் சிறிய வராகமாகத் தோன்றி, ஒரு பெரிய மலை அளவுக்கு கிடுகிடுவென்று வளர்ந்து மகா வராகமாக அவதாரம் எடுத்தார். பின், சமுத்திரத்துக்கு அடியில் சென்று ஹிரண்யாட்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவன் மறைத்து வைத்திருந்த பூமியை மீட்டு, மேலே எடுத்து வந்து அதன் இருப்பிடத்தில் நிலைநிறுத்தி அருளினார்.

அசுரனின் அட்டகாசம் முடிவுக்கு வந்ததால், ஈரேழுலகமும் நிம்மதி அடைந்தது. தேவர்கள் கோவிந்தா! கோவிந்தா என்று விஷ்ணுவைப் போற்றித் துதித்தனர். கோ என்றால் பூமி, விந்தன் என்றால் காத்தவர் என்று பொருள்.

வராக புராணத்தில் ஒரு உரையாடல் வருகிறது. மகாவிஷ்ணுவால் காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட பூமாதேவி விஷ்ணுவைப் பார்த்துக் கேட்கிறாள், பிரபு! பிரளய ஜலத்தில் அமிழ்த்தப்பட்ட என்னைக் காத்தருளினீர். இதேபோல், உலகின் ஜீவன்கள் முக்தியை அடைய சுலபமான வழியொன்றை அருளுவீராக!

இதற்கு பரமாத்மா வராக சரம ஸ்லோகம் என்று குறிப்பிடப்படும் இரண்டு ஸ்லோகங்களில் பதிலளித்தார்: ஓ, பூமா தேவியே! என் உடல்தான் இந்த உலகம். எனக்குப் பிறப்பு, இறப்பு கிடையாது. எவன் ஒருவன் நல்ல மன நிலையிலும், நல்ல உடல் நிலையிலும் இருக்கிறபோது பக்திபூர்வமாக மலர்கள் தூவி என்னை வழிபட்டுச் சரணடைகிறானோ, அவன் அந்திமக் காலத்தில் தன் இறுதி மூச்சை விடும்போது அவனைப் பரமபதம் (மோட்சம்) அடையச் செய்வேன்!

இத்தகைய சிறப்புகள் பொருந்திய லட்சுமி வராக ஸ்வாமிக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தனி ஆலயம் வெகு சிறப்பாக வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் வித்தியாசமான முறையில் வட்ட வடிவில் அமைகிறது.

இக்கோயிலின் கருவறையில் பகவான், கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க, அவருடைய மடியில் லட்சுமிதேவி வீற்றிருக்கிறார். பகவானுக்கு நான்கு கைகள். இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம். மற்றொரு இடது கையால் தேவியை அணைத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு வலது கை, அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூலவரின் விக்கிரகம் கருங்கல் சிலா ரூபம். மஹாபலிபுரம் திரு. லோகநாதன் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைக்கூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும், பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர். இத்தகைய சிறப்புகள் பொருந்திய வராஹருக்கும் சொர்ண சனீஸ்வரருக்கும் நடைபெறும் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றனர்.

English summary
The maha kumbabishekam for Sri Lakshmi Varha swamy on the Dhanvantri Temple Sorna Saniswarar,will be performed on June 14, between 7.30 a.m. and 9.00 a.m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X