• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம்

|

சென்னை: ஸ்ரீராம ஜெயம் எனப்படும் ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். ஒரு கோடி ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜப மந்திர பிரதிஷ்டை நமக்கெல்லாம் பிரார்த்தனை நிறைவேற ஒரு அற்புத வாய்ப்பு பெரும் பாக்கியம் மஹா புண்ணியம் கிடைக்கும்.

ஸ்ரீராமஜெயம் என்னும் புனிதமான ராமநாமத்தை ஒருமுறை சிந்தித்தாலே எண்ணற்ற நற்பலன்கள் உண்டாகும் என்பர் அப்பேர்பட்ட ராமநாமத்தை ஒரு கோடி முறை எழுதும் ஒரு அற்புத வாழ்நாள் பெரும் பாக்கியம் நமக்கு கிட்டியுள்ளது.

Sri Ramajayam Mandriam for Guber Veera Anjaneyar Temple

வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் சன்னதியில் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மஹா பெரியவா சன்னதியும் நவக்கிரஹ கோட்டை எனும் நவக்கிரஹ தோஷங்களும் நீங்கள் வகையில் 9 தனி தனி சன்னதியாக திருப்பணி செய்து மஹா கும்பாபிஷேக செய்ய இறை அருள் கூடி உள்ளது.

அன்னை ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் திருவருளும் மஹா பெரியவா குருவருளும் இணைந்து மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜப மந்திர பிரதிஷ்டையாக செய்து விசேஷமான இந்த ஆலய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த சிறந்த பணியில் நாம் நம்முடைய குடும்ப நலனுக்காகவும் நமது தனிப்பட்ட பிரார்த்தனை நிறைவேறவும் லோக க்ஷேமத்திற்காகவும் ஸ்ரீ ராம ஜெயம் எனும் ராம நாமாவை ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 1008 முறையாவது எழுதி இந்த ஆலயத்திற்கு அனுப்பி வைத்தால் அதை மந்திர பிரதிஷ்டையாக செய்ய உதவியாக இருக்கும். இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய லிகித ஜபம் பலனும். விரைவில் பலகோடி செல்வ வளங்களும் உண்டாகும் என்பது சர்வ நிச்சயம்

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ ராம ஜெயம் இன்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் ஹனுமான் ராம நாமாவை சிந்தித்தால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என்று ஈஸ்வரன் கூறுகிறார். எந்த பிரார்த்தனை நிறைவேற ஸ்ரீ ராம ஜெயம் எழுதுகிறீர்களோ அந்த வேண்டுதலை எழுதி ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜபம் எழுத ஆரம்பிக்கலாம்.

Sri Ramajayam Mandriam for Guber Veera Anjaneyar Temple

செல்லம் பெருக, கடன் தீர, உத்யோகம், தொழில், வியாபாரம், பணபிரச்சனை, திருமணம், குழந்தை பாக்கியம்,நோய் விலக, ஆரோக்யம்,மன நிம்மதி,குடும்ப ஒற்றுமை,கண் த்ருஷ்டி நீங்க,தம்பதி அன்யோன்யம்,சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, செய்வினை கோளாறுகள் நீங்க அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகும்..

குபேர வீர ஆஞ்சநேயர் ஸ்தல வரலாறு

அகத்திய சித்தர் திருக்கரத்தால் சிவலிங்கம் பிடித்து வழிபாடு செய்த அகஸ்தீஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில் நான்கு திசைகளிலும் ஆஞ்சநேயர் சன்னதி உண்டு முன்பொரு காலத்தில் இந்த ஊரில் நிறைய நோய்வாய்ப்பட்டு பல கஷ்டங்களை மக்கள் அனுபவித்து வந்தனர் அப்போது இருந்த மகான்கள் நகருக்கு நான்கு திசையிலும்

ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள் பிறகு அந்த ஊரின் குறை நீங்கி வளம் பெற்றதாக வரலாறு. அப்படி ஊருக்கு வடக்கு திசையில் வடக்கு நோக்கி நமது ஆஞ்சநேயர் இருப்பதால் இவருக்கு ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் என்ற திரு நாமம், வடக்கு என்பது குபேர ஸ்தானமாகும் ஆதலால் இவரை வழிபட்டால் குபேர சம்பத்து உண்டாகும் அதே போல் ஹனுமான் தலைக்கு மேல் வால் மணியுடன் இருப்பது மிகவும் சான்னித்ய மான சன்னதி நினைத்தது உடனே நிறைவேறும் தன்மை அதற்கு உண்டு.

Sri Ramajayam Mandriam for Guber Veera Anjaneyar Temple

உலகிலேயே சில இடங்களில் மட்டும் தான் இது போன்ற சன்னதி இருக்கும் அந்த தோற்றத்தில் இந்த சுவாமி இருப்பது கூடுதல் விசேஷமாகும் அதே போல இந்த விக்ரஹம் செய்தது அல்ல தானாக பூமியில் இருந்து கிடைத்த பொக்கிஷம் இவர் ஆதலால் இவருடைய பழமை எத்தனை ஆண்டுகள் என்று கணிக்க முடியவில்லை.அது மட்டும் இல்லாது இங்கு நாக தோஷம் கால சர்ப தோஷம் ராகு கேது தோஷத்தை நீக்கும் நாகர் சன்னிதியும் உண்டு இத்திருப்பணியின் போது நவக்கிரஹ கோட்டை எனும் 9 தனி தனி சன்னதியுடன் பத்னி வாகன சஹிதம் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் நவக்கிரஹ தோஷங்களை போக்கும் நவக்கிரஹ சன்னதி பிரதிஷ்டையும் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மற்றும் மஹா பெரியவா தியான மண்டபமும் அமைவது இந்த ஆலயத்தின் தனிப்பெரும் சிறப்பாகும் இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த பழைமையான ஆலய திருப்பணியில் பங்கு கொண்டு குபேர சம்பத்தை அடைவோம்.

நம் அனைவரும் சேர்ந்து இந்த திருப்பணியை நம்மால் எவ்வளவு ஈடுபாடுடன் செய்ய முடியுமோ அவ்வளவு புண்ணியம் உண்டாகும் இந்தப் புனிதத் திருப்பணிக்கு நன்கொடையாக நக்ஷத்ர தோஷம் நீங்க 27 செங்கல் நவக்கிரஹ தோஷம் நீங்க ஒரு கிரகத்திற்கு 9 செங்கல் என 108 செங்கல் மற்றும் கட்டுமான பணிக்காக ஒரு மூட்டை சிமெண்ட் தானமாக அளித்து நமது கர்மாக்களை போக்க இந்த விசேஷமான இந்த திருப்பணி கைங்கரியத்தில் பங்கு கொள்ளலாம்.

ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் ஆலயம் நவக்கிரஹ கோட்டை திருப்பணி கைங்கர்யம் மற்றும் ஸ்ரீ ராம ஜெயம் சார்ந்த தகவல்களை பெற இந்த லிங்க் மூலமாக வாட்ஸ் அப்பில் ஸ்ரீ ராம ஜெயம் என்று டைப் செய்யவும். https://wa.me/916379101306

English summary
For those who write and recite the Rama Mantra called Sri Rama Jayam, there is victory everywhere. Obstacles to work will be removed. One crore Sri Rama Jayam Likita Japa Mantra Dedication We all have the wonderful privilege of a wonderful opportunity to fulfill our prayers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X