For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீ ராம நவமி 2019: கும்பகோணம் ராமசாமி கோவிலில் கொடியேற்றம் - ஏப்ரல் 14ல் தேரோட்டம்

ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு,

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏப்ரல் 14ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

சித்திரைமாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும்,

ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.

தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி

கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இங்கு ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலிப்பதால் இக்கோவில் தென்னக அயோத்தி என்று அழைக்கப்படுகிறது.

 ராம நவமி திருவிழா

ராம நவமி திருவிழா

பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராம நவமி திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லெட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட விழா

தேரோட்ட விழா

ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராம நவமி விழா நாடு முழுவதும் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

 குடும்ப நலம் பெருகும்

குடும்ப நலம் பெருகும்

ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு.

English summary
The annual Sriramanavami festival of Ramaswamy Temple, Kumbakonam will be held on April 14.The festival began with flag hoisting on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X