For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்னி பிரவேசம் செய்த ஸ்ரீ வாசவி : தன்வந்திரி பீடத்தில் வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி ஹோமம்

ஸ்ரீ வாசவி தேவி அக்னிப் பிரவேசம் செய்த நாளில் வாழ்வு தரும் வாசவி ஹோமம் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: ஸ்ரீ வாசவி தேவி அக்னிப் பிரவேசம் செய்த நாள் என்பதால் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ வாசவி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களை கொண்டு மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது.

பார்வதி தேவியின் அவதாரமான ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியே ஆரிய வைசியர்களின் குலதெய்வமாகப் போற்றப்படுகிறாள். இந்த அம்மனை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள். வாணிபத்துடன் தர்மசிந்தனை மேலோங்க பண்பும் கலாச்சாரமும் வழுவாமல் நன்னெறியுடன் வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு எல்லாமே இந்த வாசவி என்ற கன்னிகாபரமேச்வரி தெய்வம் தான்.

ஒருமுறை கைலாயத்தில் நந்தி தேவர், சிவபெருமானை நடனமாடி மகிழ்வித்து வணங்கினார். ஆனால் பார்வதி தேவியை வணங்க மறந்து விட்டார். பார்வதி தேவி நந்தி தன்னை வேண்டுமென்றே வணங்காமல் புறக்கணித்ததாக எண்ணி அவரை பூமியில் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார். தான் விரும்பிச் செய்யாத தவறுக்கு தன்னை சபித்ததை எண்ணி வருத்தமும், கோபமும் அடைந்த நந்தி தேவர் பதிலுக்குப் பார்வதியை பூமியில் பெண்ணாகப் பிறந்து கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

வாசவி தேவி அக்னி பிரவேசம்

வாசவி தேவி அக்னி பிரவேசம்

பெண்ணாக பிறந்த வாஸவாம்மா ஒரு கட்டத்தில் தன்னைக் காரணமாக வைத்து, வைசிய குலத்திற்குப் பெரும் சோதனையுண்டானதை எண்ணி தீக்குளித்து உயிரை விட முடிவெடுத்தாள். அதன்படி அவள் அக்னிப்பிரவேசம் செய்வதை தாங்கமுடியாத 102 கோத்திரத்து வைசியர்களும் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தாமும் அக்னிபிரவேசம் செய்தனர். அதன் பிறகு வாசவி தன் உண்மையான ரூபத்தை அனைவரும் அறியச் செய்து, ஒழுக்கம், தியாகம், தர்மங்களை அவர்களுக்கு உபதேசித்து மறைந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆரிய வைசிய குலத்தவர்கள்

ஆரிய வைசிய குலத்தவர்கள்

ஆந்திர மாநிலம் பெனுகொண்டா நகரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி சன்னதி முன்பாக ஸ்ரீ வாசவி அக்னி பிரவேசம் செய்த நாளாகும். ஆரிய வைசியர் குலத்தவர் தாங்கள் செய்த புண்ணியம் மற்றும் வழிபாட்டு பலன்கள் காரணமாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிதேவி குலதெய்வமாக பெற்றனர்.

இவரின் சுயசரிதத்தைப் படிப்பவர்க்களும், காதார கேட்பவர்க்களும் இப்புவியில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர் என்கிறது கந்தபுராணம்.

வாணிபர்களின் குல தெய்வம்

வாணிபர்களின் குல தெய்வம்

வாஸவாம்பாவை வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி என வைசிய குலத்தார் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். என்னுடன் அக்னி பிரவேசம் செய்த 102 கோத்திரக்காரர்களுக்கும் நான் உங்கள் குல தெய்வமாக இருந்து உங்கள் சந்ததியினரையும், என்னை வழிபடும் பிற மத, இனத்தவரையும் காத்தருள்வேன் என்று ஆரிய வைசியர் குலத்தவர்களுக்கு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிதேவி அசிர்வதித்த நாள் தை அமாவாசைக்கு இரண்டாவது நாளாகும்.

வாசவி தேவி வழிபாடு

வாசவி தேவி வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய ஆரிய வைசிய பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ வாசவாம்பாள் எனும் ஸ்ரீ வாசவி தேவியை நாலடி உயரத்தில் இரண்டு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

வாசவிக்கு சிறப்பு பூஜை

வாசவிக்கு சிறப்பு பூஜை

கையில் கிளியுடன் அன்னை மீனாக்ஷி போன்ற அழகுடன் பிரதிஷ்டை செய்து அவரின் அவதார திருநாளான வைகாசி மாத வளர்பிறை தசமியிலும், தை அமாவாசைக்கு இரண்டாவது நாளில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அக்னிப் பிரவேசம் செய்த நாளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜை செய்து வருகிறார். இப்பீடத்திற்கு தமிழக முன்னாள் ஆளுநர் மேதகு ரோசய்யா அவர்கள் வருகை புரிந்து மஹாமண்டப பூமி பூஜையில் பங்கேற்று ஸ்ரீ வாசவி தேவியை தரிசித்து ஸ்வாமிகளை பாராட்டி சென்றுள்ளார்.

வாசவி தேவிக்கு ஹோமம்

வாசவி தேவிக்கு ஹோமம்

நாளைய தினம் ஜனவரி 18ஆம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீ வாசவி தேவி அக்னிப் பிரவேசம் செய்த நாள் என்பதால் அன்று காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00 மணிக்கு மூலவர் ஸ்ரீ வாசவி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களை கொண்டு மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், 09.00 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம் நடைபெற உள்ளது.

English summary
Sri Vasavi Kannika Parameshwari is the goddess of kula devatha of the Arya vysya community. She was born into the family of Kusuma Sresti, the king of Vysyas in Penugonda and his consort Kusumamba.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X