For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் இன்பமும் நிலைக்கும்

தேரோட்டத்தை காணும் போது நம்முடைய துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாளைய தினம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. தேரோட்டத்தை கண்டால் துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் பக்தர்கள் திரண்டு வந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார். மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.

தேராட்டம் என்பது ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையை குறிப்பதாலும் தேர் மெதுவாக செல்லும் தன்மை கொண்டதாலும் சனைஸ்வர பகவானும் காரகனாகின்றனர் ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இவர்களுக்கு நிலையான வாழ்வு இருக்காது. வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள்.தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் நாளை நடைபெறும் தேரோட்டம் கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் இன்பமும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நம்பெருமாள் வீதி உலா

நம்பெருமாள் வீதி உலா

விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 26ஆம் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும் 27ஆம் தேதி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினார். 28ஆம் தேதி ஞாயிறு கிழமை காலையில் இரட்டை பிரபை வாகனத்திலும் மாலையில் நம்பெருமாள் அவருக்கு மிகவும் பிடித்தமான கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

பெருமாள் வீதி உலா

பெருமாள் வீதி உலா

திங்கட்கிழமை காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30ஆம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார். நேற்றைய தினம் மே 1ஆம் தேதி நெல்லளவு கண்டருளினார். இன்று காலை வெள்ளி குதிரை வாகனத்தில் உலா வந்த நம்பெருமாள் மாலை தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

திருத்தேரோட்டம்

திருத்தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 4ஆம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 5ஆம்தேதி நம்பெருமாள்ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை காணும் போது நம்முடைய துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

துன்பங்கள் நீங்கும்

துன்பங்கள் நீங்கும்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இவர்களுக்கு நிலையான வாழ்வு இருக்காது. வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள்.தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. நீங்களும் உடனே ஸ்ரீரங்கத்திற்கு கிளம்புங்க மக்களே.

English summary
Srirangam Renganathar temple Chithirai Car Festival on Friday at Srirangam temple. Today Silver Horse Vahanam Evening Gold Horse Vahanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X