For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ஆம் நாள்: ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

பகல்பத்து உற்சவம் 5 ஆம் திருநாள் காலை நம்பெருமாள்,ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து உற்சவத்தின் 5 ஆம் திருநாள் காலை நம்பெருமாள்,ரத்தின பாண்டியன் கொண்டை,வைர அப யஹஸ்தம் வைர கைக் காப்பு, விமான பதக்கம்,நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 21 நாட்கள் நடைபெறும். நம்பெருமாள் தினசரியும் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். ஒவ்வொருவிதமான அலங்காரத்துடன் வைரம், வைடூரியம், மௌத்து, பவளம் போன்ற பலவிதமான அணிகலன்களால் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணைகல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து உற்சவத்தின் 5 ஆம் திருநாள் காலை நம்பெருமாள்,ரத்தின பாண்டியன் கொண்டை,வைர அப யஹஸ்தம் வைர கைக் காப்பு, விமான பதக்கம்,நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல்பத்து உற்சவம்

பகல்பத்து உற்சவம்

பகல் பத்து திருவிழாவின் முதல்நாளன்று உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்கக் கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

வைர அலங்காரம்

வைர அலங்காரம்

பகல் பத்து இரண்டாம் நாள் டிசம்பர் 05ஆம் நாள் நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர காதுகாப்பு, தங்கக் கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்சாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அருள்பாலித்த நம்பெருமாள்

அருள்பாலித்த நம்பெருமாள்

பகல் பத்து மூன்றாம் நாள் நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியாணம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

மகாலட்சுமி பதக்கம்

மகாலட்சுமி பதக்கம்


டிசம்பர் 07ஆம் தேதி நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியாணம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

திருவாபரணங்கள்

திருவாபரணங்கள்

இன்றைய தினம் பகல்பத்து உற்சவத்தின் 5 ஆம் திருநாள் காலை நம்பெருமாள்,ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம் வைர கைக் காப்பு, விமான பதக்கம்,நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

டிசம்பர்14ல் சொர்க்கவாசல் திறப்பு

டிசம்பர்14ல் சொர்க்கவாசல் திறப்பு

டிசம்பர் 13ஆம் தேதியன்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். டிசம்பர் 14ஆம் தேதியன்று பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
On the morning of the 5th day of the Pagal pathu festival at the Srirangam Ranganathar Temple, Namperumal served the devotees in special attire at the Arjuna Mandapam wearing special ornaments including the Ratna Pandian necklace, diamond bracelet bracelet, air medal, gooseberry garland and layered medal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X