For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை.

மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும். அதில் பிரசித்தி பெற்றது வைகுண்ட ஏகாதசி திருவிழா மார்கழி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

Srirangam Ranganathar Temple Vaikunda Ekadasi festival Mukurthakkal function

இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 14 ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் நேற்று காலை நடைபெற்றது.

முகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை.

வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.14 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 04.45மணிக்கு நடைபெற உள்ளது.

English summary
The Mukurthakkal planting ceremony for the Vaikunda Ekadasi festival at the Srirangam Sriranganathar Temple was held in a riotous manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X