• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க கொரோனா பக்கத்தில கூட வராது

|

மதுரை: உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆவி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்கும் கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி இருக்கலாம்.

  கபசுர குடிநீர் குடிங்க...நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-சித்த மருத்துவர்கள்

  இன்றைக்கு பெரும்பாலான ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் ஸ்டீம் பாத் எனப்படும் நீராவி குளியல் என்பது கட்டாயம் இருக்கும். நீராவி குளியலை எடுத்துகொண்டால், நமது தோலின் மேற்புறத்திலுள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதோடு, உடலையும் மனதையும் நாள் முழுவதும் புத்தணர்ச்சியை கொடுக்கும், அதோடு உற்சாகத்தை அளிக்கும் என்பதால் தான். இது சுமார் ஐம்பது ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் நடைமுறை ஆகும்.

  உண்மையில் நீராவி குளியல் என்பது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழக்க வழக்கமாகும். ஆனால், இதற்கு முன்னோடியாக இருப்பது ஆவி பிடிக்கும் முறையாகும். இது சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழக்கவழக்கம் கிடையாது. பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பின்பற்றி வரும் மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். ஒரு காலத்தில் ஒரே தும்மல், தொடர்ச்சியான இருமல், தலை வலி, தலை பாரம் என்றால் வீட்டு பெரியவர்கள், ஆவி பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.

  பாட்டி வைத்தியம்

  பாட்டி வைத்தியம்

  இயற்கையான முறையில், தலைவலி, உடல் வலி, சளித் தொந்தரவு, இருமல் என எதுவாக இருந்தாலும் சரி முதலுதவியாக செய்து வருவது ஆவி பிடிப்பது தான். அதோடு, இயற்கையாக எளிய முறையில், நமது சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளையும் நோய்க் கிருமிகளையும் வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட மிக எளிய வைத்திய முறை தான் ஆவி பிடித்தல் ஆகும். இது பைசா செலவழிக்காமல் நம் முன்னோர்கள் கையாண்ட கை வைத்திய முறையாகும்.

  தோற்றப் பொலிவு கூடும்

  தோற்றப் பொலிவு கூடும்

  ஆவி பிடிப்பதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதோடு, ஆவி பிடிப்பதால், நமது தோலின் மேற்புறம் விரிவடைந்து, உள்புறத்திலுள்ள தேவையற்ற அழுக்குகள் விரைவாக வெளியேறிவிடும். இதனால் நம் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறையாவது ஆவி பிடித்தால் முகப்பொலிவு கூடும். அதோடு முகச்சுருக்கம் மற்றும் முதுமைத் தோற்றத்தையும் தவிர்க்கலாம்.

  ஆவி பிடித்தல்

  ஆவி பிடித்தல்

  ஆவி பிடிப்பதற்காக நாம் ஒன்றும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இருமல், ஜலதோஷம், சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் இதெல்லாம் பறந்தொடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும். மேலும், இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்துவரவேண்டியது அவசியமாகும்.

  எப்படி ஆவி பிடிப்பது

  எப்படி ஆவி பிடிப்பது

  சூடான நீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்துகொண்டு, நம்மை போர்வையால் மூடிக்கொண்டு, சூடான நீர் உள்ள பாத்திரத்தின் மூடியை சிறிது சிறிதாக விலக்கி, பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஆவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும். கூடவே, முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதி,களில் ஆவி படும்படி திருப்பி திருப்பி செய்துவர வேண்டும். அதே சமயத்தில் நமது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான், பைசா செலவு இல்லாமல் மிக எளிமையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது.

  கெட்ட நீர் வெளியேறும்

  கெட்ட நீர் வெளியேறும்

  இவ்வாறு சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவேண்டும். இப்படி, ஆவி பிடிப்பதால், தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலை வலியால் அவதிப்படுபவர்களுக்கு, கெட்ட நீர் முழுவதும் வெளியேறிவிடும். சளிக்கட்டு, சளித் தொந்தரவு, தொண்டையில் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றுகள் முழுவதும் அழிந்துவிடும்.

  தொண்டையை தாக்கும் கொரோனா வைரஸ்

  தொண்டையை தாக்கும் கொரோனா வைரஸ்

  தற்போது உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால், தொண்டையில் இருக்கும் வைரஸ் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். அதோடு மார்பு சளியையும் முற்றிலும் கரைத்துவிடும்.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  This spirit treatment is also used by doctors to save people from Coronavirus threatening the world. The Coronavirus first attacks the throat. From there, the lungs begin to see. Therefore, they have begun to adopt a spiritually destructive method of eradicating the Coronavirus.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more